மார்பகப் புற்றுநோயா பயம் வேண்டாம் 

0
324
Breast cancer

Breast cancer

மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன? அது எவ்வாறு தோற்றம் பெறுகின்றது?

ஒரு பெண்ணுக்கு, மார்பகமானது அந்த பெண் தாய்மையடைந்து தனது மழலைக்கு ஒரு வருடங்கள் அல்லது ஒன்றரை வருடங்கள் வரை தாய்பாலை ஊட்டக்கூடியதாக இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உருவ அமைப்பாகும். இந்த மார்பகத்திலே பாலை சுரக்குகின்ற கலங்கள், பாலை கடத்துகின்ற கலங்கள், தசை நார்கள், நார் இழையங்கள், கொழுப்புப் படிவுகள் எனப் பல்வகையான இழையங்கள் காணப்படுகின்றன. சாதாரணமாக மனித உடலிலே காணப்படும் இழையங்களில்க் காணப்படும் அடிப்படை அலகான ‘கலங்கள்’, ஏதாவது ஒரு காரணத்தினால் தவறாகப் பிரிகை அடைந்து தவறான முறையிலே, அவை பெருகின்ற பொழுது அவ்விடத்திலே அவை, கட்டிகளைத் தோற்றுவிக்கின்றன. ஆனால் இவ்வாறு தோற்றுவிக்கப்படும் அசாதாரண கட்டிகள், நேரத்திற்கு நேரம் மனிதனுடைய உடலிலே காணப்படுகின்ற நிர்பீடணத் தொகுதி மூலம், அதாவது நோய் எதிர்ப்புத் தொகுதியாகத் தொடர்ந்து விழிப்பாகவும் அவதானமாகவும் தொழிற்படுவதனால் உடனடியாக அவை அமைப்பழிவடைவிக்கப்பட்டு நிணநீர்த் தொகுதி மூலம் ஈரலுக்கூடாகவும் மண்ணீரலுக்கூடாகவும் மனித உடலிலிருந்து அகற்றப்படுகின்றன. ஆனால், இந்தப் பொறிமுறைகளில் இருந்து தப்புகின்ற கட்டிகள் அல்லது விகாரமடைந்த அசாதாரணமான கட்டிகள் இதுவே, பின்னர் மார்பகப் புற்றுநோயாகத் தோற்றம் பெறுகின்றன.

மார்பகப் புற்றுநோயானது எந்த வயதிலுள்ள பெண்களை அதிகம் தாக்குகின்றது?

இலங்கையில் வாழ்கின்ற பெண்களில், மார்பகப் புற்றுநோயானது, 45 – 55 வயது வரையுள்ள பெண்களில் அதிகம் காணப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், 17 வயதுப் பெண்களில் கூட மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 80 – 85 வயதுப் பெண்கள் கூட, மார்பகப் புற்றுநோயின் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே 20 வயது முதல் 70 வயது வரையான பெண்களுக்கு இந்நோய் தாக்கக்கூடிய வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்? அதற்கான அறிகுறிகள் என்ன?

  1. மார்பகத்தில் கட்டிகள் தோன்றுவதால் மார்பகங்கள், விம்மிப் புடைத்துக் காணப்படலாம்.
  2. முலைக்காம்புகளுக்கூடாக, பாலைத் தவிர்ந்த திரவ கசிவுகள், சிதல், இரத்தம் போன்ற கசிவுகள் வெளியேறுதல்.
  3. முலைக்காம்பு உள்நோக்கித் திரும்பிக் காணப்படல்.
  4. முலைக்காம்பு வெடித்துச் சிதைவடைந்து காணப்படல்.
  5. மார்பகத்தின் மேற்றோல், தோடம்பழத்தின் தோலைப் போன்று வீங்கிக் காணப்படல்.
  6. மார்பகத்தில் அங்காங்கே உட்குழிவுகள் காணப்படல்.
  7. முலைக்காம்பினை சுற்றியுள்ள பகுதியில் செந்நிறத் தடிப்புக்கள் அல்லது புண் காணப்படல்.
  8. மார்பகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வலி காணப்படுதல்.
  9. அக்குள் பிரதேசங்களில் வீக்கம் அல்லது கட்டி காணப்படுதல்.
  10. நிணநீர் முடிச்சுகள் வீங்கிக் காணப்படல்.

 

மார்பக புற்றுநோயால் பீடிக்கப்படடுள்ள பெண்ணுக்குக் கிடைக்கக்கூடிய சத்திர சிகிச்சை முறைகள் எவை?

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை, மார்பகத்திலே கட்டிகள் கண்டுபிடிக்கப்படும் எல்லாப் பெண்களுக்கும் ஒரே வகையான, அதாவது மார்பகத்தைப் பூரணமாக அகற்றும் முறையே காணப்பட்டது. பின்னர், சந்தேகிக்கப்படும் கட்டிகளை மட்டும் அகற்றுவதோடு, இவ்வாறு மார்பகம் அகற்றப்பட்டவர்களுக்கு, அகற்றப்பட்ட மார்பகங்களுக்கு பதிலாக அந்த பெண்ணினுடைய இடுப்பு மற்றும் முதுகுத் தசைகளை கொண்டு மார்பகங்களை மீள வடிவமைக்கும் சத்திரசிகிச்சை முறைகள் பிரபல்யமடைந்தன. இதன்பின்னர், அதிநவீன சத்திரகிச்சை உத்திகள் மூலம், சந்தேகத்திற்குரிய கட்டிகள் மாத்திரம் அகற்றப்பட்டு, அக்கட்டிக்கு சூழவுள்ள இழையங்கள் குறிப்பிட்ட தூரம் வரை உள்ள இழையங்களும் அகற்றப்படுகின்றன. இப்பொழுது இந்த சத்திரசிகிச்சை முறைதான் பிரபல்யமாக இருக்கின்றது. இதற்குக் காரணம், ஒரு பெண்ணின் மார்பகங்கள், சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்படும்போது கடும் உளவியற் தாக்கத்திற்குள்ளாகின்றாள். எனவே இந்த உளவியற் தாக்கங்களை வெற்றிகொண்டு, மீண்டும் அவளை பூரண பெண்ணாக வாழவைக்க, இந்த சத்திரகிச்சை முறை வழிவகுக்கும்.

 

மார்பகப் புற்றுநோய் வராமல் பெண்கள் எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம்?

பருவமடைந்த ஒவ்வொரு பெண்ணும், குறிப்பிட்ட ஒரு திகதியில், தங்களுடைய மார்பகங்களைச் சுய பரிசோதனை செய்ய வேண்டும். அதாவது நல்ல பாதுகாப்பான வெளிச்சமுள்ள ஒரு அறையில், மேலாடைகளை முற்றாக அகற்றி, தங்கள் கரங்களை பக்க வாட்டில் வைத்தவாறும், இடுப்பில் ஊண்டியவாறும், தங்கள் தலைக்குமேல் தூக்கியவாறும், முன் குனிந்த நிலையில் மார்பங்களை பார்வையிட்டும் மார்பங்களை தடவிப்பார்த்தும் இந்த சுய மார்பகப் பரிசோதனைகளைச் செய்தல் வேண்டும். இந்த சுய மார்பகப் பரிசோதனையில் ஏதாவது வித்தியாசம் தெரியுமிடத்தில் வைத்தியநிலையத்துக்குச் சென்று, இந்தத் துறையில் நன்கு பயிற்றப்பட்ட மருத்துவ மாதுக்கள் போன்றவர் மூலம் இந்தப் பரிசோதனையை செய்யலாம். இப் பரிசோதனையில், ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் வைத்தியரிடம் செல்ல வேண்டும். எனவே ஆரம்பத்திலே மார்பகக் கட்டிகளைக் கண்டுபிடிக்க சுயமார்பகப் பரிசோதனை மிக அவசியம்.

தினமும் ஆறு லீட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். எங்கள் உடலில் உள்ள  இழையங்களில், கலங்களில், நிமிடத்துக்கு நிமிடம் விகாரமான கலங்கள் உருவாகி அமைப்பழிவடைக்கின்றன. இந்த அமைப்பழிவடையும் இந்த நச்சுபொருட்களை மனித உடலிலிருந்து அகற்றுவதற்கு Anti Oxydant எனப்படும் ஒரு பதார்த்தம் தேவைப்படுகின்றது. செலவின்றி இலகுவாக கிடைக்கும் ஒரு அன்டிஒக்சிடன்ட், நீர் ஆகும். அதனால்தான், தினமும் 6 லீட்டர் நீர் அருந்த வேண்டும். உங்கள் உணவில் பச்சை இலைக்கறிகள், பழங்கள் அதிகளவில் சேர்த்துக்கொள்ளப்படல் வேண்டும். நார்பொருட்கள் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும். தினமும் போதியளவு உடற் பயிற்சி செய்யப்படல் வேண்டும். மேலும் மனதிற்கு இதம் தரும் பாடல்களைக் கேட்கலாம். நடனம் புரியலாம். யோகாசனம் செய்யலாம் புற்று நோய் சம்பந்தமான விழிப்புணர்வு பெறவும் வேண்டும் பரப்பவும் வேண்டும்.

Breast cancer

தொடர்புடைய  செய்திகள்:

சூலகப்புற்றுநோய் பெண்களை பலவீனப்படுதுகிறதா?

மேலதிக செய்திகள்:

http://viduppunews.com/

News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here