மரணத்தை தோற்றுவிக்கும் கருப்பைப் புற்றுநோய்! தடுக்கும் வழிகள் என்ன?

0
346
karppappai putru noi vaithia tamil kurippu

karppappai putru noi vaithia tamil kurippu

வைத்தியக் கலாநிதி. சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்.

வைத்திய அதிகாரி.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்சித்திட்டம்.

இலங்கை சுகாதார அமைச்சு.

 

பெண்களுக்கே உரியதான, பெண்களிலே மரணத்தை தோற்றுவிக்கும் புற்றுநோய்களில் ஆறு வீதமான பங்கை வகிக்கின்ற கருப்பைப் புற்றுநோயை, எவ்வாறு நாம் வெற்றிக்கொள்ளலாம் என்ற விபரங்களையும் விளக்கத்தையும்  வாசகர்களுக்காக, வைத்தியக கலாநிதி. சிவப்பிரகாசம் அனுஷ்யந்தனின் செவ்வியின் மூலம், முழுமையாக உங்களுக்காக, கீழ்வருமாறு.

 

கேள்வி: கருப்பைப் புற்றுநோய் என்றால் என்ன?

பதில்: பெண்களில் மரணத்தை ஏற்படும் இந்தப் புற்றுநோயானது, Endometrium எனப்படுகின்ற கருப்பையினுடைய உள்ளக மேலணி இழையத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. மூன்று விதமான புற்றுநோய்கள் கருப்பையைச் சூழவிருக்கின்ற இழையங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் ஆறு வீதமானவை கருப்பைப் புற்றுநோயாகும். மிக ஆரம்ப நிலைகளிலேயே கண்டுபிடிக்கப்படுவதால், இந் நோயினால் மீண்டு வாழ்வோரின் எண்ணிக்கையானது மிக அதிகமாகும்.

 

கேள்வி: கருப்பைப் புற்றுநோய் தாக்கத்திற்கு அதிகமாக உள்ளாவோர்கள் யார்? 

பதில்:

 1. ஈஸ்ரோஜன் ஹோர்மோனுக்கு அதிகளவு முகங்கொடுப்போர். இவர்கள் ஈஸ்ரோஜன் ஹோர்மோனிற்கு முகங்கொடுக்கும் நேரமும் அதன் அளவிற்கும் ஏற்ப இவர்களில் ஆபத்து காரணி கூடுகின்றது. அதாவது இளவயதிலேயே பூப்படைந்தவர்கள்.
 2. மிகப் பிந்திய வயதில் மாதவிடாய் சக்கரம் நின்றவர்கள். இந்த கருப்பை புற்றுநோயானது பெண்களில் 60 வயதில் தான் அதிகமாக ஏற்படுகின்றது. ஆனாலும் 50 வயது பெண்களும் இதற்கு அதிகளவில் முகங் கொடுக்கிறார்கள். வயது செல்ல செல்ல இந்தநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது, மாதவிடாய் சக்கரம் முற்றாக நின்ற பெண்களில் 75 வீதம் கருப்பை புற்றுநோய் ஏற்படுகின்றது.
 3. உடலில் சுரக்கின்ற அதிகளவு ஈஸ்ரோஜன் காரணிகள். அதாவது அதிகளவு உடற்பருமன் கூடியவர்கள், Polycystic Ovarian Syndrome எனப்படுகின்ற நோய் கொண்டவர்கள், மாதவிடாய்ச் சக்கரங்களின் போது மிகக் குறைந்தளவிலான இரத்தபோக்கு கொண்டவர்கள்.
 4. தாய்மைப்பேறடையாதவர்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையில் மழலைகளைப் பெற்றுக் கொண்டவர்கள்.
 5. அதிகளவு உடல் நிறை கூடியவர்களுக்கு இந்த புற்றுநோய்க்கான ஆபத்து காரணி அதிகம்.
 6. உடலுக்கு வெளியில் இருந்து ஈஸ்ரோஜன் சுரப்பு ஹோர்மோனை உள் எடுப்பவர்கள். அதாவது புரோஜஸ்ரோன் எனப்படும் ஹோர்மோன் இல்லாது தனியே ஈஸ்ரோஜனை மட்டும் உள் எடுப்பவர்கள். மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டு, மார்பகப் புற்றுநோய்க்குரிய சிகிச்சைக்காக Tamoxifen என்ற மருந்தை ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து உள் எடுப்பவர்கள்.
 7. மாதவிடாய்ச் சக்கரம் நின்ற பின்னர், ஈஸ்ரோஜன் வில்லையை ormone Replacement Therapy ஆக உள்ளெடுத்தவர்கள்.
 8. அதிகளவில் மிருகக் கொழுப்பு அடங்கிய உணவு வகைகளை உள்ளெடுப்பவர்கள்.
 9. தோற்றா நோய்கள் கொண்டவர்களுக்கு இதன் ஆபத்து காரணி அதிகளவு உண்டு. அதிலும் நீரிழிவு நோயின் தாக்கத்துக்கு உட்பட்டவர்கள்.
 10. ஆசிய நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.
 11. கருப்பைப் புற்றுநோயைக் குடும்ப வரலாறாகக் கொண்டவர்கள்.
 12. hereditary nonpolyposis colon cancer (HNPCC) என்னும் நோயைக் குடும்ப வரலாறாகக் கொண்டவர்கள்.
 13. இளவயதில் மார்பகப் புற்றுநோயாலோ அல்லது சூலகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள்.
 14. பெண் இனப் பெருக்கத் தொகுதியில் ஏற்பட்ட ஏதாவது புற்றுநோய்க்காக கதிர்வீச்சுச் சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர்கள்.

 

கேள்வி: கருப்பை புற்றுநோயின் வகைகள் என்ன?

பதில்: கருப்பை கழுத்து புற்றுநோயானது இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றது. 1. வகை 1 – இவ்வகைக் புற்றுநோய் அதிகளவில் ஏற்படுவது –

 1. வயது குறைந்த பெண்கள்.
 2. மாதவிடாய் சக்கரம் நிற்பதற்கு அண்மித்த வயதில் உள்ள பெண்கள்.
 3. உடல் நிறை கூடிய பெண்கள்.
 4. உடலில் அதிகளவான ஈஸ்ரோஜன் ஹோர்மோன் சுரப்புக் கூடிய பெண்கள். இது மிக குறைந்த நிணநீர் முடிச்சுக்களை ஊடுருவும் தன்மை கொண்டது. மேலும் பூரண புற்றுநோய்ச் சிகிச்சையின் பின்னர் மிகச் சிறந்த முறையில் நோயிலிருந்து மீண்டுவாழக்கூடிய தன்மையை இது காண்பிக்கின்றது.
 5. வகை 2 – இவ்வகைப் புற்றுநோய் அதிகளவில் ஏற்படுவது,
 6. வயது கூடிய பெண்கள்.
 7. மாதவிடாய்ச் சக்கரம் நின்ற பெண்கள்.
 8. உடலளவில் மெல்லிய பெண்களில் ஏற்படும்.

இது பரிணாம வளர்ச்சியில் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்று. மேலும் மிகக் கூடிய நிலையில் நிணநீர் முடிச்சுக்களினூடாகப் பரவும் தன்மை கொண்டது.

 

கேள்வி: இந்த நோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கு ஏதாவது திரையிடல் முறைகள் உள்ளனவா?

பதில்: கருப்பைக் கழுத்துப் புற்றுநோயைப், பப் பரிசோதனை மூலம் கண்டு பிடிப்பது போன்று, இப்புற்றுநோய்க்கு இதுவரையில் அப்படி எதுவும் இல்லை. ஆனால் நோயாளர்களை ஆபத்து காரணிகள் குறித்தும், இந்த நோயின் தன்மைகள் அறிகுறிகள் குறித்தும் அறிவுறுத்தும் பட்சத்தில் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம். இந்த அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் பல்வேறு திரையிடல் முறைகள் செய்யப்படுகின்றது.

 

கேள்வி: கருப்பைப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் எவை?

பதில்:

 1. இரண்டு மாதவிடாய்ச் சக்கரங்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ஏற்படும் குருதிப்பெருக்கு. இக் குருதிப்பெருக்கு 90 வீதமான பெண்களில் ஏற்படும். மாதவிடாய் சக்கரம் நின்ற பெண்களில், 15 வீதம் குருதிப்பெருக்கு காணப்படும்.
 2. மாதவிடாய்க் காலங்களில் குருதிப்பெருக்கு அதிகளவில் காணப்படும்.
 3. சலம் கழிக்கும்போது எரிவும் சலம் கழிப்பதில் சிரமத் தன்மையும்.
 4. உடலுறவின்போது வலி ஏற்படல்.
 5. வயிற்றின் அடிப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் வலி.
 6. வயிற்றின் அடிப்பகுதியில் காணப்படும் கட்டி அல்லது கடினத் தன்மை.
 7. காரணம் அறியப்படாத உடல் எடை இழப்பு.
 8. தொடர்ந்து காணப்படும் நாரி நோவு.

 

கேள்வி: இவற்றைத் தவிர்ந்த வேறு அறிகுறிகள் யாவை?

பதில்:

 1. யோனி வழியினூடாக குருதிப்பெருக்கு.
 2. யோனி வழியினூடாக வெள்ளைத் திரவ பெருக்கு (80 – 90 வீதமானவர்களில்).
 3. கால் உளைவு.
 4. மலம், சலம் கழிக்கும் பழக்க முறையில் மாற்றம்.
 5. கருப்பையினுள் குருதி பெருகி உறைவடைதல்.
 6. கருப்பையில் கலங்கள் அமைப்பழிவடைந்து சிதழ் நிரம்புவதால் கருப்பை வீக்கமடைதல்.

 

கேள்வி: கருப்பைப் புற்றுநோயை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?

பதில்:

 1. Hysteroscopy எனப்படும் பரிசோதனை மூலம் ஏறக்குறை 91 – 99 வீதமான அசாதாரண கருப்பைக் கல நிலமைகளை கண்டுபிடிக்கலாம்.
 2. பப் பரிசோதனை எனப்படும் கருப்பைக் கழுத்து இழையவியல் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம்.
 3. யோனி வழிக்கூடாகச் செலுத்திச் செய்யப்படும் கணனியொலி பரிசோதனையின் முடிவுகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
 4. கருப்பையில் உள்ள இழையங்களை சுரண்டி எடுத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் ஊடாக இந்த நோய் தான் என உறுதிசெய்து கொள்ளலாம்.

 

கேள்வி: கருப்பைப் புற்றுநோயின் தாக்கத்தினை உறுதியாகக்  கண்டு பிடிப்பதற்கான வழிமுறைகள் என்ன?

பதில்: கருப்பையின் மேலணி இழையங்களை சுரண்டி எடுத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் ஊடாக இந்த கருப்பைப் புற்றுநோயை உறுதிசெய்து கொள்ளலாம். அதேநேரம், கமரா ஒன்றினை கருப்பை கழுத்தினூடாக கருப்பையினுள் செலுத்து புற்றுநோய் அல்லாத புறக்காரணிகளையும் கண்டுபிடிக்கலாம்.

 

கேள்வி: கருப்பைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர்களுக்குரிய சிகிச்சை முறை என்ன?

பதில்:

 1. மிக ஆரம்பத்திலேயே இந்நோயைக் கண்டறியும் பட்சத்தில் கருப்பையை பூரணமாக அகற்றுதல்.
 2. தேவையில்லாதவிடத்து இரு சூலகங்களையும் பலோப்பியன் குழாயையும் முற்றாக வெட்டி அகற்றுதல்.
 3. பெண்ணின் நாரிப் பகுதியில் காணப்படும் நிணநீர் முடிச்சுக்களை முற்றாக அகற்றல்.
 4. அத்தோடு இழையவியல் பரிசோதனையை மேற்கொள்ளல். புற்றுநோய் என முடிவு செய்யுமிடத்து அவர்களை மேலதிக பரிசோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் அறிவுறுத்துதல்.

 

கேள்வி: கருப்பைப் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன?

பதில்:

 1. பூரண உடற்பரிசோதனை உட்படுத்தி முழுமையான உடற் தகுதி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளல்.
 2. இவர்களில், இரத்த இரசாயனப் பரிசோனைகள், இரத்த பரிசோதனை, ஈரல் பரிசோதனை, எக்ஸ் கதிர்ப் பரிசோதனை, எம்.ஆர்.ஐ. பரிசோதனை, கணியொலிப் பரிசோதனை மூலம் இந்த நோயின் தாக்கம் வேறு இடங்களுக்குப் பரவியுள்ளதா என்று அறிந்து கொள்ளல்.

 

கேள்வி: கருப்பைப் புற்றுநோய் தான் எனக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இவர்களுக்கு வழங்கப்படும் இறுதிச் சிகிச்சைகள் என்ன?

பதில்: இவ்வகை நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சை நல்ல பலன் தரக்கூடியது. மேலும் புற்றுநோய் அண்மையிலுள்ள இழையங்களுக்குப் பரவியுள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுமிடத்து கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தலாம். மேலும் கதிர்வீச்சு சிகிச்சையுடன் கூடிய கலக் கொல்லி இரசாயன ஊசி மருந்துகளையும் செலுத்திச் சிகிச்சையளிப்பர். சத்திர சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்த முடியாதவர்களுக்கு நேரடியாக முதன்மை நிலை கதிர்வீச்சு சிகிச்சையும் அதனோடு இணைந்த ஹோர்மோன்கள் மூலம் கொடுக்கப்படும் சிகிச்சையும்  இணைந்து வழங்கப்படுகின்றது.

karppappai putru noi vaithia tamil kurippu

 

தொடர்புடைய  செய்திகள்:

 சூலகப்புற்றுநோய் பெண்களை பலவீனப்படுதுகிறதா?

மேலதிக செய்திகள்:

http://ulaganadappu.com

http://netrikkann.com/

http://sportstamil.com/

http://www.technotamil.com/

http://viduppunews.com/

http://tamilhealth.com/

http://sothidam.com/

http://www.ulagam.com/

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here