எந்த பழத்தில் எவ்வளவு சத்து இருக்குன்னு தெரியுமா?

0
252
healthy fruit calory information tips

(healthy fruit calory information tips)

டயட் என்ற பெயரில் சில சமயங்களில் நாம் உணவுக்குப் பதிலாக இரண்டு வாழைப் பழங்களையோ அல்லது ஏதாவது பழங்களையோ சாப்பிடுகிறோம். அது நமக்குத் தேவையான கலோரிகளையும் ஆற்றலையும் கொடுத்துவிடுகிறது என்று எண்ணுகிறோம்.

பழங்களில் கொழுப்புச்சத்து கிடையாதுதான். ஆனால் அது நமக்குத் தேவையான கலோரிகளை முழுவதும் தருவதில்லை.

அதனால் ஒரு வேளை உணவுக்குப் பதிலாக இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருப்பவராக இருந்தால் முதலில் நீங்கள் இதைப் படியுங்கள்.

எந்தெந்த பழங்களில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றன என்று முதலில் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி, சாப்பிடுங்கள்.

ஒரு பெரிய ஆரஞ்சுப் பழத்தில் 88.3 கலோரிகள் இருக்கின்றன. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த சிட்ரஸ் பழங்களில் 405 மில்லிகிராம் அளவுக்கு பொட்டாசியமும் உள்ளது.

வெயில் கொளுத்தும் வேளையில் நாம் எல்லோருமே விரும்பி உண்ணுவது தர்பூசணியைத்தான். ஒரு கப் தர்பூசணியில் 100.8 கலோரிகள் கிடைக்கும்.

ஒரு மீடியம் சைஸ் பேரிக்காயில் 103.2 கலோரிகள் உள்ளன. மேலும் ஒரு பேரிக்காவில் 5.5 கிராம் அளவுக்கு நார்ச்சத்தும் உள்ளது.

இரண்டு கப் அளவுக்கு நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியில் இருந்து நீங்கள் 106.2 கலோரிகள் மட்டுமே பெற முடியும். இது ஒரு வாழைப்பழத்தின் கலோரி அளவை விட கொஞ்சம் மட்டுமே அதிகம். மேலும் இரண்டு கப் ஸ்ட்ராபெர்ரியில் 400 மில்லிகிராம் அளவுக்கு மக்னீசியம் உள்ளது.

ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 107.4 கலோரிகள் நமக்குக் கிடைக்கிறது. அதேசமயம் 3 கிராம் அளவுக்கு நார்ச்சத்தும் அதில் உள்ளது.

ஸ்ட்ராபெர்ரியைப் போன்றே சாப்பிட்டவுடன் வாயை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு திராட்சைக்கும் உண்டு. 30 திராட்சையின் அளவும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் இருந்து கிடைக்கும் கலோரியும் ஒன்று தான்.

ஒரே ஒரு வாழைப்பழத்திலிருந்து மட்டுமே நமக்கு 157.8 கலோரிகள் கிடைக்கின்றன. அதோடு எந்த பழங்களிலும் இல்லாத அளவுக்கு 422 மில்லிகிராம் பொட்டாசியம் வாழைப்பழத்தில் இருக்கிறது.

அதனால் ஒருவேளைக்கு நீங்கள் சாப்பிடும் உணவின் அளவைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, ஒரு பெரிய வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். அது பொட்டாசியம் பற்றாக்குறையையும் போக்கும்.

ஒரு முழு மாதுளையில் மற்ற எந்த எந்த பழங்களிலும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில், 234.1 கலோரி நமக்குக் கிடைக்கும். அதோடு நோயெதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பழங்களில் ஒன்று மாம்பழம். மாம்பழத்திலும் கலோரி அளவு அதிகம் தான். ஒரு மாம்பழத்தில் 248.6 கலோரிகள் கிடைத்துவிடும். அதனால் ஒரு பழம் வேண்டுமானால் ஒருவேளைக்கு எடுத்துக்கொள்ளலாமே தவிர, இரண்டு பழங்கள் எடுத்துக் கொண்டால் அதுவே மிக அதிக அளவு கலோரியாகிவிடும்.

ஒரு பெரிய சைஸ் பப்பாளியை எடுத்துக் கொண்டால் அதில் நமக்கு 249.9 கலோரிகள் கிடைக்கும். ஒருவேளை உணவுக்குப் பதிலாகக்கூட ஒரு முழு பப்பாளியைச் சாப்பிடலாம். மிகுந்த சத்துக்களையுடைய பழங்களில் பப்பாளியும் ஒன்று.

 

TAGS : healthy fruit calory information tips, healthy tasty fruit informations tamil, healthy fruit tips in tamil, healthy calories in tamil, tasty fruit tips in tamil

 

<<MORE POSTST>>

பனியில் உதடு வெடிக்க ஆரம்பிச்சிடுச்சா? இத தடவினா சரியாகிடும்
தொப்புளில் எண்ணெய் போடுங்கள்
வயதான ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்

<<VISIT OUR OTHER SITES>>

http:cinemaulagam.com
http:technotamil.com
http://tamilgossip.com/
http://tamilnews.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here