குழந்தைகளுக்கு மிகப்பெரும் ஆபத்தே வீடுதான்

0
212
kids live danger place house tamil

(kids live danger place house tamil)

குழந்தை பிறந்து தவழும் வரை பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களின் அரவணைப்பில் தான் இருக்கும். ஆனால் நடக்க ஆரம்பித்த பின் அவர்களைக் ஒரு இடத்தில் அமர வைப்பதெல்லாம் கஷ்டம்.

அம்மாக்கள் கிச்சனுக்குள் போனால் குழந்தைகளும் பின்னாலே போய் எதையாவது தள்ளிவிட்டு, அழ ஆரம்பித்தவிடும். எப்படித்தான் இவர்களை சமாளிப்பது?

பொதுவாக குழந்தைகளை ஒரு வயது முதல் மூன்று வயது வரையிலும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களுடைய வீட்டில் தான் ஆபத்து காத்திருக்கிறது.

முதல் மூன்று வயது வரை குழந்தைகள் எதையாவது துறுதுறுவென செய்து கொண்டே தான் இருக்கும். எது சரி? எது தவறு? எங்கு ஆபத்து இருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.

பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் எட்டி எடுக்கும் இடங்கிளலேயே ஸ்பிரே, ஆசிட், க்ளீனர் போன்றவற்றை வைத்துவிடுகிறார்கள்.

எதை எடுத்தாலும் வாயில் வைத்துக் கொள்ளும் குழந்தைகள் அவற்றையும் அதன் விபரீதங்கள் தெரியாமல் எடுத்து வாயில் வைத்துக் கொள்கின்றன. இதனால் பல குழந்தைகள் கண்களை இழந்துவிடக்கூடிய சோகங்களும் நிகழ்வதுண்டு.

எமெர்ஜன்சி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளில் அதிக சதவீதம் பேர் இதுபோன்று வீடுகளில் எதையாவது செய்து விபரீதத்துக்கு உள்ளானவர்களாகவே இருக்கிறார்கள். இன்றைய காலத்து பெற்றோர்களும் கொஞ்சம் அஜாக்கிரதையாகவே தான் இருக்கிறார்கள்.

 

TAGS : kids live danger place house tamil, kids care tips in tamil, healthy kid care tips in tamil, health tips in tamil

 

<<MORE POSTS>>
கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் என்ன செய்யணும்?
எந்த பழத்தில் எவ்வளவு சத்து இருக்குன்னு தெரியுமா?
மன அமைதிக்கு நேரம் ஒதுக்குங்கள்

 

<<VISIT OUR PTHER SITES>>
http://tamilnews.com
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here