பெண்களை அதிகம் தாக்கும் சர்க்கரை நோய்

0
210
women quick attack diabetic tamil

(women quick attack diabetic tamil)

இன்றைய பெண்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறி வரும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். உடலில் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவு இல்லாமல் போவதால் நீரிழிவு நோய் வருகிறது. குடும்பத்தில் அம்மா அல்லது அப்பாவுக்கு நீரிழிவு நோய் இருந்தாலோ, உடல் பருமனாக இருந்தாலோ நீரிழிவு நோய் பாதிப்பதற்கான சாத்தியம் அதிகம்.

பெண்களையும் அதிகம் தாக்கும் இந்த நோயின் பின்விளைவுகள் பலருக்குத் தெரிவதில்லை. அடிக்கடி சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் அரிப்பு, அதிக தாகம் எடுத்தல், நாக்கு வறட்சி, அதிக பசி, சோர்வு, எடை குறைதல், தோலில் அரிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும் பெண்கள் உடனடியாக ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த பெண் மட்டுமல்லாமல் அவரை சார்ந்திருப்பவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.முறையான உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

நீரிழிவு நோய் உள்ள பெண்கள் நேரம் தவறாமல் சாப்பிடாவிட்டால் சர்க்கரை அளவு குறைந்து நினைவிழக்கும் அபாயம் உள்ளது. அளவுக்கு அதிகம் சாப்பிடுபவர்கள், இனிப்பு சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் பல தொந்தரவுகளை கொடுக்கும்.

ஒரு பெண்ணுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால் அவர் மட்டுமல்லாமல் அவருடன் இருப்பவர்களுக்கும் பொறுப்பு அதிகம். ஏனென்றால் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் பெண்கள், தங்களை கவனித்துக் கொள்வதில்லை. இந்த வழக்கத்தை பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் பெண்களையே அதிகம் தாக்குவதாகவும், மாதவிடாய் நின்ற பெண்களிடம் நீரிழிவு நோய் அதிகமாக காணப்படுவதாகவும் மருத்துவ ஆய்வு சொல்கிறது. இந்த நோய்க்கு 1923-ம் ஆண்டு இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதை கண்டுபிடித்த கனடா நாட்டு மருத்துவர் பிரெட்ரிக் பேன்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி உலக நீரிழிவு நோய் நாளாக 1991-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெண்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறி வரும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நமக்கான வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நாமே இழுத்துப்போட்டு செய்தாலே சர்க்கரை நோயில் இருந்து பாதி விடுபடலாம்.

 

TAGS : women quick attack diabetic tamil, women health tips in tamil, dibetic tips in tamil, diabetic heel tips in tamil, healthy diabetic tips in tamil
<<MORE POSTS>>
 குழந்தைகளுக்கு மிகப்பெரும் ஆபத்தே வீடுதான்
எந்த பழத்தில் எவ்வளவு சத்து இருக்குன்னு தெரியுமா?
மன அமைதிக்கு நேரம் ஒதுக்குங்கள்

 

<<VISIT OUR PTHER SITES>>
http://tamilnews.com
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here