பெர்ஃபியூம் வாங்க முதல் இதை தெரிந்து கொள்ளுங்கள்

0
230
Perfume Brought Tips Tamil Health, Perfume Brought Tips Tamil, Perfume Brought Tips, Perfume Brought, Perfume Tips

(Perfume Brought Tips Tamil Health)

பெர்ஃபியூம்களை தேர்வு செய்வதென்பது எளிதான வேலை இல்லை. ஆண்களும் பெண்களும் விதவிதமான பெர்ஃபியூம்களை பயன்படுத்துவார்கள். சிலர் எந்த பெர்ஃபியூமை எப்படி தேர்வு செய்வதென்று தெரியாமல், முன்னால் பயன்படுத்திய அதே பெர்ஃபியூமை வாங்குவார்கள். வெகு சிலர் ஒரு பெர்ஃபியூம் தீர்ந்தவுடனே, வேறு பெர்ஃபியூமை தேர்ந்தெடுப்பார்கள்.

தற்போது 100-க்கும் மேற்பட்ட பெர்ஃபியூம்கள் இந்திய சந்தையில் வந்த வண்ணம் உள்ளது. இதில் எதை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் அனைவருக்கும் வருவது இயல்பே. இதுகுறித்து ‘தி பாடி ஷாப்’ நிறுவனத்தின் தலைமை பயிற்சியாளர் ஷிகீ அகர்வால் மற்றும் அஜ்மல் பெர்ஃபியூம்ஸ்-ன் கன்சல்டிங் பெர்ஃபியூமர் அப்துல் அஜ்மர் தெரிவித்துள்ளது இதோ…

* முதலில் எதை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

* EDP பெர்ஃபியூம்களின் வாசனை அதிக நேரம் நீடித்திருக்கும். எனவே, EDT பெர்ஃபியூம்களை தேர்ந்தெடுக்கலாம்.

* பெர்ஃபியூம்களை முதலில் முகர்ந்து பாருங்கள். 5 நிமிடத்துக்கு பின்னர் அதன் வாசத்தில் சிறு மாற்றும் ஏற்படும். இது 10 நிமிடத்திலிருந்து 45 நிமிடம் வரை இருக்கும். அதன் பின்னர் வேறு சிறு மாற்றம் ஏற்படும். இந்த மூன்று வாசனைகளுமே உங்களுக்கு பிடித்திருந்தால், அது உங்களுக்கான பெர்ஃபியூம்.

* பெர்ஃபியூம்களை கையில் அடித்து பாருங்கள். இதன்மூலம் எவ்வளவு நேரத்தில் அது கரைகிறது என்பதை அறியலாம்.

* பெர்ஃபியூம்களை வாங்குவதற்குமுன் நிறைய பெர்ஃபியூம்களை முகர்ந்து பார்ப்பது வாடிக்கை. அப்படி செய்யும்போது, 3 பெர்ஃபியூம்களை முகர்ந்ததும் சில காஃபி பீன்ஸ்களை முகருங்கள். இது மேலும் சில பெர்ஃபியூம்களை முகர உதவும்.

* பெர்ஃபியூம்களை தேர்ந்தெடுக்கும்போது, மணிக்கட்டில் மட்டுமே அடித்து பார்க்காதீர்கள். வேறு சில இடங்களிலும் அடித்து பாருங்கள்.

* பெர்ஃபியூம்களின் விளக்கங்களை படித்து பார்த்து அதற்கு ஏற்றதுபோல உங்களின் தேர்வு அமையக்கூடாது. உங்களுக்கு எந்த வாசனை பிடித்திருக்கிறது என்பதற்கு மட்டுமே முன்னுரிமை அளியுங்கள்.

* பெர்ஃபியூம்களின் இன்டென்சிட்டியை கவனியுங்கள். 20%-40% இன்டென்சிட்டி உள்ள பெர்ஃபியூம்கள் உங்களது தேர்வை சரியானதாக்கும்.

 

TAGS : Perfume Brought Tips Tamil Health, Healthy Perfume Tips in Tamil, Health Tips in Tamil

 

<<MORE POSTS>>
அதீத வியர்வை எனும் மிகப்பெரும் பிரச்சினை

குழந்தைகளுக்கு எவ்வாறான உடை அணிவிக்க வேண்டும்?

சிசேரியன் பிரசவத்தில் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா?

 

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here