உங்கள் குழந்தைகளுக்கு மேகி நூடில்ஸ் கொடுக்காதீர்கள்

0
184
Avoid Unhealthy Food Maggi Noodles Tips, Avoid Unhealthy Food Maggi Noodles, Unhealthy Food Maggi Noodles, Food Maggi Noodles, Maggi Noodles,

(Avoid Unhealthy Food Maggi Noodles Tips)

தற்போது வீட்டுக்கு வீடு குட்டீஸ்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது மேகிநூடில்ஸை தான். குட்டீஸ் மாத்திரம் அல்ல டீன் ஏஜ்காரர்களும் இதையே மூன்று வேளையும் உட்கொள்கிறார்கள்.

குழந்தை களுக்குப் பிடித்த இன்ஸ்டன்ட் உணவு நூடுல்ஸ்தான். மாலையில் ஸ்கூல் விட்டுத் திரும்பும் பள்ளிப் பிள்ளைகள் முதல் கல்லூரி மாணவ மாணவியர் வரை அதிகம் சாப்பிடுவது இதைத்தான்.

ஆனால் இந்த நூடில்ஸில் அதிக அளவு பாதிப்புகள் இருப்பது அண்மைய ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த நூடில்ஸில் கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு உப்பு ஆகும். உணவின் ருசியை அதிகரிக்க சேர்க்கிறார்கள். ஆனால் இதன் அளவு மிக மிக அதிகமாக நூடில்ஸில் இருக்கிறதாம். இந்த உப்பு சுவைதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கிறது. இந்த உப்பில் எவ்வளவு சுவை உள்ளதோ அவ்வளவு ஆபத்தும் உள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.01 பிபிஎம்தான். ஆனால் மேகி நூடில்ஸில் இது 17 பிபிஎம் ஆக உள்ளதாம். இதன் காரணமாக கற்கும் திறன், நடத்தை மற்றும் எலும்புகள் உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்பட்டு மந்த கதியாக்கி விடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே இந்த நூடில்ஸுக்கு தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தயவு செய்து இந்த நூடில்ஸை உங்கள் வீடுகளில் பயன்படுத்தாதீர்கள். பிரபல நெஸ்லே நிறுவனம்தான் இந்த மேகி நூடில்ஸை தயாரிக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

TAGS : Avoid Unhealthy Food Maggi Noodles Tips, Healthy Noodles Tips in Tamil, Maggi Awarness Tips in Tamil

 

மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

 

<<MORE POSTS>>

இளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்

தினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்கலாம்

நீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here