லிப்ஸ்டிக் ரொம்ப நேரம் உங்கள் உதட்டில் இருக்க மறுக்கிறதா?

0
146
Women Beauty Lips Stick Tips, Women Beauty Lips Stick, Women Beauty Lips, Women Beauty, Women Beauty Tips

(Women Beauty Lips Stick Tips)

சில விஷயங்கள் வாழ்வில் குறைந்த நேரம் இருந்தாலும் மகிழ்ச்சியை உண்டாக்கும். சில விஷயங்கள் நீண்ட நேரம் இருப்பதால் நமக்கு சந்தோசம் உண்டாகும். இவற்றில் இரண்டாவது நிலையில் வருவது நமது உதட்டில் தடவும் லிப்ஸ்டிக். உங்கள் பிசியான வேலை சூழலில் அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்தி உதட்டை அழகுபடுத்துவது என்பது முடியாத செயலாகும். சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும், உங்கள் உதட்டில் உள்ள லிப்ஸ்டிக் காணாமல் போகும் வாய்ப்புகள் உண்டு. சில அழகான உடைகளில் கூட அவை ஒட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் உண்டு.

பிறகு அதனை அந்த துணியில் இருந்து நீக்குவது என்பது மற்றொரு கடினமான செயல். ஆனால் இவற்றையெல்லாம் நாம் கடந்து தான் ஆக வேண்டும். யாருக்குமே டச் அப் செய்து கொள்வதற்கான நேரம் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைக்க, அவை நீண்ட நேரம் உதட்டில் தங்கும் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் உங்கள் நேரம் அதிகமாக மிச்சப்படும். இதனைத் தொடர்ந்து படித்து, கீழே சொல்லப்பட்ட குறிப்புகளை முயற்சித்து பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்.

உதட்டை நீர்ச்சத்தோடு வையுங்கள் : (Women Beauty Lips Stick Tips)
உதட்டில் உள்ள இறந்த செல்களைப் போக்கி, உதட்டை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ளுங்கள். இதனால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் தங்கும். உதட்டை எக்ஸ்போலியெட் செய்ததற்குப் பிறகு லிப் பாம் பயன்படுத்தி மாயச்ச்சரைஸ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உதடுகள் மென்மையாக இருக்கும். ஆரோக்கியமான உதடுகளில் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்துங்கள் : (Women Beauty Lips Stick Tips)
லிப் லைனர் பயன்படுத்துவதால் உதட்டில் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்கும். லிப் லைனரில் இருக்கும் மெழுகுத்தன்மை, உதடுகளில் லிப்ஸ்டிக்கை ஒட்டிக் கொள்ளச் செய்யும். உதட்டில் இருக்கும் லிப்ஸ்டிக், உதட்டில் இருந்து வெளியேறாமல் தடுக்க இந்த லிப் லைனர் பயன்படுகிறது. பொதுவான லிப் லைனர் அல்லது லிப்ஸ்டிக் நிறத்திற்குப் பொருத்தமான நிற லிப் லைனர் பயன்படுத்தலாம். லிப் லைனர் உதடுகளுக்கு அழகான வடிவத்தையும் தர உதவுகிறது.

லிப் ப்ரைமர் பயன்படுத்துங்கள் :
உதட்டின் நிறத்திற்கு ஒரு பவுண்டேஷனை இந்த ப்ரைமர் தருவதால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதட்டில் தங்குகிறது. லிப்ஸ்டிக் பயன்படுத்த தேவையான ஒரு மிருதுவான லேயரை இந்த ப்ரைமர் தருகிறது. மேலும் லிப்ஸ்டிக் கரைந்து வெளிவராமல் இருக்கவும் பயன்படுகிறது. லிப் ப்ரைமரில் இருக்கும் சில கூறுகள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.

ஈரத்தை உறிஞ்சுவது :
உதடுகளில் உள்ள ஈரத்தை உறிஞ்சுவது என்பது எளிமையான காரியம் தான். ஆனால் அதனை கச்சிதமாக செய்ய வேண்டும். ஈரத்தை உறிஞ்சி எடுப்பதால், உதட்டில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப்பசை குறைகிறது. மேலும் உதட்டில் இருந்து லிப்ஸ்டிக் வழிந்து வருவது குறைக்கப்படுகிறது. முதலில் ஒரு மெல்லிய லேயர் லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவவும். பிறகு ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து உதட்டில் ஒத்தி எடுக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உதட்டில் அடுத்த லேயர் லிப்ஸ்டிக்கை தடவவும்.

பவுடர் பயன்படுத்தவும் :
உங்களுக்குப் பிடித்த லிப் கலரைப் பயன்படுத்தியவுடன், டிஷ்யூ பேப்பரை எடுத்து உதட்டில் வைக்கவும். பிறகு ஒரு பிரஷில் ட்ரான்ஸ் லுசென்ட் பவுடரை டிஷ்யூ பேப்பர் மேல் தடவவும். பிறகு டிஷ்யூ பேப்பரை எடுத்துவிட்டு மேலும் ஒரு லேயர் லிப் கலரை பயன்படுத்தவும்.

பவுண்டேஷன் பயன்படுத்தவும் :
பவுண்டேஷனும் லிப் ப்ரைமர் போல் வேலை செய்யும். உதட்டின் மென்மையை அதிகப்படுத்தி, லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதட்டில் தங்க இது உதவுகிறது. பவுண்டேஷனை உதட்டில் தடவ விரல் நுனி அல்லது தட்டையான பிரஷ் பயன்படுத்தலாம். பவுடர் பவுண்டேஷன் பயன்படுத்தும்போது பிரஷ் மட்டும் பயன்படுத்துவது நல்லது.

லிப்ஸ்டிக் பார்முலா :
சரியான லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நீண்ட நேரம் தங்கக்கூடிய லிப்ஸ்டிக்கில் குறைந்த மாயச்ச்சரைஸர் மற்றும் அதிக நிறமி இருப்பதால், அதிக நேரம் இவை உதடுகளில் தங்க நேரிடுகிறது. ஆகவே வாட்டர் ப்ரூஃப் லிப்ஸ்டிக்கை வாங்கிப் பயன்படுத்தலாம். க்லோசி அல்லது ஒளி புகாத லிப்ஸ்டிக் மிக குறைந்த நேரமே தங்குகிறது.

சரியான முறையில் பயன்படுத்துவது :
சரியான வடிவில் உதடுகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக் தடவலாம். லிப் கலர் பயன்படுத்தும்போது உதட்டின் ஒரு மூலையில் இருந்து மிகவும் கவனமாக நடுப்பகுதி வரை கொண்டு செல்ல வேண்டும். இதனால் ஒரு சரியான ஃபினிஷ் கிடைக்கும்.

லிப்ஸ்டிக் கரைந்து வெளிவராமல் இருக்க :
உதடுகளில் இருந்து லிப்ஸ்டிக் வழியாமல் இருக்க சில எளிய வழிமுறைகள் உள்ளது. கன்சீலர் பென் அல்லது புருவ ஜெல் பயன்படுத்தி உதட்டில் கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். இவை லிப்ஸ்டிக்கிற்கு ஒரு பாதுகாப்பாக இருந்து வெளியில் வழியாமல் காக்கும். என்ன வாசகர்களே! லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முறையை தெரிந்து கொண்டீர்களா? இன்னும் என்ன தாமதம், மேலே கூறியவற்றை முயற்சித்து அழகாக நீண்ட நேரம் பளிச்சிடும் உதடுகளை பெறுங்கள். #TamilNews

 

TAGS : Women Beauty Lips Stick Tips, Women Beauty Tips in Tamil, Sexy Lips in Tamil

 

மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

 

<<MORE POSTS>>

இளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்

தினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்கலாம்

நீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here