இதை செய்துதான் நடிகை நதியா தன் வயதில் பாதியை குறைத்துக் கொள்கிறாராம்

0
283
Actress Nathiya Young Look Secret Tamil, Actress Nathiya Young Look Secret, Actress Nathiya Young Look, Actress Nathiya Young, Actress Nathiya

(Actress Nathiya Young Look Secret Tamil)
வயது முதிர்வு என்பது பெரிதாகக் கவலைப்பட வேண்டிய விஷயமில்லை. வயது முதிர்விற்கான அடையாளங்களை நமது உடல் வெளிப்படுத்தும் போது அதனை நமது மனம் ஏற்று கொள்ள வேண்டியது தான். இது ஒரு இயற்கையான செயல். இன்னும் சொல்லப்போனால் இது ஆரோக்கியத்தின் வெளிப்பாடும் கூட. Actress Nathiya Young Look Secret Tamil

மனதளவிலும் இது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால், இளமையில் வயது முதிர்வு என்பது ஒருவரை மனதளவில் அதிகம் பாதிப்படைய செய்யும் ஒரு விஷயம். ஆகவே இளம் வயதில் முதிர்ச்சி ஏற்படுவதை தாமதப்படுத்த சில வழிகள் உள்ளன. அவற்றை இப்போது காண்போம்.

வயதான தோற்றம் Actress Nathiya Young Look Secret Tamil
நமக்கு முந்தைய தலைமுறையினரை விட நமது தலைமுறையினருக்கு சரும சீர்கேடு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நமக்கு ஏற்படுகின்ற மன அழுத்தம். எப்போதும் கணினி முன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது, வெளி காற்று உடலில் படாமல் இருப்பது, தேவையான உடற்பயிற்சிகளை செய்யாமல் இருப்பது, ஊட்டச்சத்துகள் குறைபாடு போன்றவை இந்த மாற்றத்தில் முக்கிய இடம் பெறுபவையாகும். இத்தகைய சரும பாதுகாப்பின்மையால், சருமம் அதன் எலாஸ்டிக் தன்மையை விரைந்து இழக்கிறது.

சூரியக்கதிர்கள்
மறுபுறம் சுற்றுசூழல் மாசு, அதிகரித்து வரும் இத்தகைய சுற்றுசூழல் சீர்கேடும், சருமத்திற்கு நன்மையை அளிப்பதில்லை. சரும சேதத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சருமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக மெலனின் உற்பத்தி ஏற்படுவதால் அந்த பகுதி நிறமிழந்து வயது முதிர்விற்கு வழி வகுக்கிறது. இந்த செயல்பாடுகள் பொதுவாக 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படுவதாகும். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கும் இதே நிலை உண்டாகும் வாய்ப்பு அவர்கள் பெரும்பகுதி நேரத்தை சூரிய ஒளியின் கீழ் கழிக்கும்போது ஏற்படுகிறது. மிகவும் மென்மையான சருமம் உள்ளவர்கள் இந்த பாதிப்பை மிக விரைவில் அடைகிறார்கள்.

வீட்டுப் பராமரிப்பு
நீங்கள் வெளியில் பயணிக்கும்போது உங்களுடன் எப்போதும் சன் ஸ்க்ரீன் கூடவே இருக்கட்டும். அதனைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பயன்படுத்துவதால் உங்கள் சரும சேதம் தவிர்க்கப்படுகிறது. வயது முதிர்வை போக்குவதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை எளிய முறையில் வீட்டில் இருந்தபடி தயார் செய்யும் விதமாக உள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை சாறு :
எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் உள்ள அணுக்களை உடைக்க உதவுகிறது. சருமத்தின் மேல் தோலை நீக்கி, புதிய தோல் வளர வழி வகுக்கிறது. இந்த காரணத்திற்காகவே, எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச் என்று கூறப்படுகிறது. சிறிதளவு எலுமிச்சை சாறை எடுத்து, வயது முதிர்வு தோன்றிய இடங்களில் தடவவும். பிறகு நன்றாக காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த சிகிச்சைக்கு பிறகு, வெயிலில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆப்பிள் சிடர் வினிகர் :
ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் , ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள ஒரு மிக்க கூறாகும். பலவித சரும பாதுகாப்பு சாதனங்களிலும், ஒப்பனை பொருட்களிலும் இந்த மூலப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதனை தொடக்கத்தில் சில முறை உபயோகிக்கும் போது, ஒரு வித எரிச்சல் உண்டாகும் வாய்ப்பு உண்டு. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒரு பங்கு ஆப்பிள் சிடர் வினிகருடன் இரண்டு பங்கு தேனை சேர்த்து முகத்தில் தடவலாம். வயது முதிர்வு அதிகமாக தெரியும் இடங்களில் அதிக கவனம் செலுத்தி தடவலாம். இதனை தினமும் செய்து வருவதால் விரைவில் நல்ல மாற்றத்தை உணரலாம்.

விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணெயில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் இருப்பதால், இது வயது முதிர்வை தடுக்கப் பெரிதும் உதவுகிறது. வயது முதிர்வு தோன்றும் இடங்களில் சிறிது விளக்கெண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். சில மணி நேரங்கள் கழித்து முகத்தை கழுவவும். இதனை தினமும் செய்வதால் வயது முதிர்வு விரைவில் குறைந்து காணப்படும்.

பால் :
வயது முதிர்ச்சியைக் குறைக்க பால் ஒரு சிறந்த தீர்வாகும். பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் சந்தையில் கிடைக்கும் பல்வேறு சரும பாதுகாப்பு பொருட்களில் காணப்படுகிறது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது சிறந்த பலனை கொடுக்கிறது. சருமத்திற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாமல், இறந்த செல்களை அழிக்கிறது. சருமத்தை ஈரப்தத்துடன் வைக்க பால் பெரிதும் உதவுகிறது.

தக்காளி சாறு :
எலுமிச்சை சாறின் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது தக்காளி சாறு. எலுமிச்சை சாறை விட அதிக மென்மையாக இருக்கக் கூடியது தக்காளி சாறு. இதற்கு காரணம் தக்காளி சாறில் இருக்கும் குறைந்த அளவு அமில தன்மை. இதனை தடவுவது மிகவும் எளிது. தக்காளியை நறுக்கி அதனை உங்கள் சருமத்தில் நேரடியாக தடவலாம். தக்காளியின் சாற்றை உங்கள் சருமம் உறிஞ்சிக் கொள்ளும். சிறிது நேரம் கழித்து, தண்ணீரால் கழுவலாம். இதனை தினமும் பயன்படுத்தலாம். சூரிய ஒளியால் ஏற்பட்ட சேதத்திற்கும் இதனை மருந்தாக பயன்படுத்தலாம். தக்காளியில் இருக்கும் குளிர்ச்சி தன்மை சருமத்தை அதிகம் குளிரச் செய்கிறது.

வைட்டமின் ஈ எண்ணெய் :
வைட்டமின் ஈ எண்ணெய் சருமத் திட்டுக்களைக் குறைத்து நிறமிழப்பை குறைக்கிறது. வைட்டமின் ஈ மாத்திரையில் இருந்து அந்த எண்ணெய்யை எடுத்து சரும திட்டுகள் உள்ள இடத்தில் தடவவும். இந்த எண்ணெய் சருமத்தில் உள்ள திட்டுக்கள், பருக்கள் , கரு வளையம், நிறமிழப்பு போன்றவற்றில் சிறப்பாக செயல்படுகிறது. சரும வெட்டுகள் இருக்கும் இடத்தில் மட்டும் இதனை தடவ வேண்டாம். அப்படி செய்தால் இது எதிர் வினையை உண்டாக்கும்.

மஞ்சள் :
சருமப் பாதுகாப்பிற்கு மஞ்சள் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. நிறமிழப்பு அதிகமாக இருக்கும் இடங்களில், சிறிது ரோஸ் வாட்டருடன் மஞ்சளைக் கலந்து தடவலாம். இதனை தினமும் செய்து வர, விரைவில், உங்கள் சருமம் மென்மையாக மாறும். மேலே கூறிய எளிய குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம். இவற்றைப் பயன்படுத்தி உங்கள் வயது முதிர்வை குறைக்கலாம். #TamilNews

 

TAGS : Actress Nathiya Young Look Secret Tamil, Women Beauty Tips in Tamil, Beauty Secret Tips in Tamil
<<MORE POSTS>>

உடல் எடை குறைய அரிசி சாதத்தை இவ்வாறு சமைத்து சாப்பிடுங்கள்

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சாப்பிடலாமா?

தினமும் இரவு தூங்கும் முன் இதை குடிங்க… சீக்கிரமா ஒல்லி ஆகலாம்

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here