கருத்தரித்தலுக்கு தடையாக அமையும் கருப்பை நீர்க்கட்டிகள்

0
346
Women Pregnancy Ovarian cysts News Tamil, Women Pregnancy Ovarian cysts News, Women Pregnancy Ovarian cysts, Women Pregnancy Ovarian, Women Pregnancy

(Women Pregnancy Ovarian cysts News Tamil)
பொதுவாக, பூப்பெய்திய பெண்களில் நான்கில் ஒருவருக்கு கருப்பை கட்டி பிரச்சினைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. அவை புற்று நோய் அல்லாத சாதாரண கட்டிகளாக கருப்பை, அதன் உட்புற சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்களிலும் உருவாகின்றன. அதனால், மாதவிடாய் காலங்களில் அடிவயிறு வலி, வீக்கம் ஆகியவை ஏற்படுவதோடு கருத்தரித்தலுக்கும் தடையாக அமைகின்றன. மேலும், அவை உருவாகியுள்ள இடம் மற்றும் அளவு ஆகியவற்றை பொறுத்து பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படலாம்.

கருத்தரித்தலுக்கு தடையாக இருக்கும் கருப்பை நீர்க்கட்டிகள்

கருப்பை நீர்க்கட்டிகளை தக்க மருத்துவ பரிசோதனை மற்றும் ‘அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ மூலமாக கண்டறியலாம். அளவில் பெரியதாகவும், ரத்தப்போக்கை உண்டாக்குவதாகவும் உள்ள நீர்க்கட்டிகளுக்கு மட்டும் அறுவை சிகிச்சை தேவைப்படும். மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவற்றால் ஏற்படும் வலியை குறைக்க இயலுமே தவிர அவை மறையாது.

அதற்கான சிகிச்சை முறைகளில் அதிநவீன ’லேப்ராஸ்கோபிக்’ மற்றும் கணினி மூலம் செய்யப்படும் ‘ரோபோடிக் சர்ஜரி’ ஆகியவை இன்று முக்கியமாக இருக்கின்றன. அவற்றின் மூலம் சுலபமாகவும், துல்லியமாகவும் அறுவை சிகிச்சையை செய்து கொண்டு விரைவில் வீடு திரும்பி, வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட முறைகள் மூலம் மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள் அவற்றை தக்க முறையில் கவனித்து சரி செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம். #TamilNews
மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

TAGS : Women Pregnancy Ovarian cysts News Tamil, Women Pregnancy Tips in Tamil, Women Health Tips in Tamil

<<MORE POSTS>>

40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரியுங்கள்

இதை செய்துதான் நடிகை நதியா தன் வயதில் பாதியை குறைத்துக் கொள்கிறாராம்

ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here