பெண்களுக்கு மாரடைப்பு தாக்கும் முன்னர் வெளிப்படும் அறிகுறிகள் இவைதான்

0
382
Women Heart Attack Symptoms Health Tips, Women Heart Attack Symptoms Health, Women Heart Attack Symptoms, Women Heart Attack, Women Heart

(Women Heart Attack Symptoms Health Tips)
சில வருடங்களுக்கு முன்னர் ஆண்களே இதய நோய் மற்றும் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், சமீப காலங்களில் வந்த ஆய்வுகளில் மாரடைப்பினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் தங்கள் உடல் நிலையை சரியாக பாதுகாக்காமல் விட்டுவிடுவதால்தான் மாரடைப்பில் வந்து முடிகிறது.

மாரடைப்பிற்கும் சாதாரண வாய்வு பிடிப்பு அல்லது வேறு ஏதாவது பாதிப்பிற்கும் வித்தியாசம் தெரியாததால் இது உடல் நிலையை மோசமாக்குகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.

நெஞ்சு அடைத்தல் :
திடீரென நெஞ்சு அடைப்பது போல் இருந்தால் இதய நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். உடனே பதட்டப்படாதீர்கள்.
வாய்வு பிடிப்பு இருந்தாலும் சில சமயம் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். இதனையும் மாரடைப்பையும் நிறைய பேர் குழப்பிக் கொள்வதுண்டு. நெஞ்சை அடைப்பதுடன் கூடவே மூச்சுத் திணறலும் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.

சோர்வு :
சோர்வு உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிக வேலை, மன அழுத்தம் மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது என சொல்லிக் கொண்டே போகலாம். சரியாக ரத்தம் இதயத்தில் பம்ப் செய்ய முடியாமல் போகும்போது சோர்வு உண்டாகிறது. எனவே அதிக சோர்வும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கும்.

தசைவலி :
தங்க முடியாத தசை மற்றும் தோள்பிடிப்பு இருந்தால் அது இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதனை அஜாக்கிரதையாக விட்டுவிட்டால் மாரடைப்பில் கொண்டு போய்விடும்.

தூக்கமின்மை :
ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது தூக்கமின்மை உண்டாகும். மன அழுத்தம், இதய பாதிப்புகள் இருக்கும்போது தூக்கமின்மை ஏற்படும். நெடு நாட்கள் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களாக இருந்தால் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

வியர்வை :
கை, கால்கள் திடீரென வியர்க்க ஆரம்பிக்கும். உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டும். தலைசுற்றல் ஆரம்பிக்கும். ரத்த நாளங்களில் வரும் இடயூறுகளால் இந்த பாதிப்புகள் உண்டாகும்.

இடது பக்க வலி :
இடது பக்கம் முழுவதும், தோள்பட்டையிலிருந்து கால் வரை ஒரு பக்கமாகவே வலித்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். மாரடைப்பு வருவதற்கு ஒருசில நாட்களுக்கு முன் இடது பக்கம், பின்பக்கம் நடுமுதுகில், என வலி மெதுவாய் படர ஆரம்பிக்கும்.

படபடப்பு :
திடீரென படபடப்பு ஏற்படும். மனப்பதட்டம், கை – கால் நடுக்கம் ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறிகளில் ஒன்று. படபடப்பு சில இக்கட்டான சூழ்நிலைகளில் வருவதுண்டு. ஆனால் அதனையும் இந்த படபடப்பையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. காரணமேயில்லாமல் திடீரென படபடப்பு மற்றும் இதயத் துடிப்பு தாறுமாறாக இருந்தால் அது மாரடைப்பிற்கான சாத்தியத்தை தருகிறது.

அசிடிட்டி :
மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன் திடீரன நாள் முழுவதும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டவாறு இருக்கும். அடிவயிற்றிலிருந்து நெஞ்சு வரை எரிச்சல் இருக்கும். இத்தகைய சமயத்தில் நீங்கள் உடனே சுதாரித்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 

TAGS : Women Heart Attack Symptoms Health Tips, Women Health Tips in Tamil, Heart Attack Symptoms in Tamil

 

மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

<<MORE POSTS>>

கருத்தரித்தலுக்கு தடையாக அமையும் கருப்பை நீர்க்கட்டிகள்

யோகாசனத்துக்கு உடலைத் தயார் செய்வது எப்படி?

என்றும் இளமையாக ஜொலிக்க சருமப் பராமரிப்பு அவசியம்

 

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here