நீங்க ஷேவிங் பண்ணும்போது இதெல்லாம் பயன்படுத்துறீங்களா? இனி செய்யாதீங்க…

0
224
men healthy shave beauty tips

(men healthy shave beauty tips)

ஷேவிங் செய்வது அழகு மட்டும் அல்ல ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட. ஆண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக ஷேவ் செய்வார்கள். சிலர் குளிக்கப் பயன்படுத்தும் சோப்பை ஷேவிங்கிற்கும் பயன்படுத்துவதுண்டு.

சிலர் வறண்ட சருமத்தில் அப்படியே பிளேடை பயன்படுத்துவது போன்ற தவறுகளைச் செய்வதுண்டு. ஆனால் நாம் செய்யும் அந்த சிறுசிறு தவறுகள் சருமத்தில் அலர்ஜியையும் நோய்த்தொற்றுக்களையும் உண்டாக்கிவிடும்.

ஷேவிங்கின் போது பயன்படுத்துவதற்கென்றே உள்ள பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, அவற்றின் பயன்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, பயன்படுத்துவது நல்லது.

ப்ரீ- ஷேவிங் ஆயில்
உங்கள் சருமத்தையும் தாடியையும் மென்மையாக்கும்.

ஷேவிங் கிரீம்
ஷேவிங் கிரீம் தாடியை மென்மையாக்குவதோடு, சருமத்துகள்களை திறந்துவிடும். அது நீங்கள் முகத்துக்கு நெருக்கமாக பிளேடை வைத்து பயமின்றி ஷேவ் செய்ய உதவும். காயங்கள் ஏற்படுவது குறையும்.

ஷேவிங் சோப்
ஷேவிங்கிற்கு சோப்பைப் பயன்படுத்துவது மிகவும் பழைய மரபார்ந்த முறையாக இருந்தாலும் சிலர் இன்னும் இந்த வழியையே பயன்படுத்துகின்றனர். ஷேவிங்குக்கென தனி சோப்புகள் கிடைக்கும். அவை தாடியை மென்மையாக்கி எளிமையாக ஷேவ் செய்திட உதவும்.

ஷேவிங் பிரஷ்
கைகளில் தேவையில்லாமல் சோப்பு மற்றும் கிரீம் ஆகியவை ஒட்டிக் கொள்ளாமல் பயன்படுத்தலாம். தாடியுள்ளவராக இருந்தால் தாடிக்குள் எளிமையாக உள்நுழைந்து கிரீமை அப்ளை செய்துவிட முடியும். கைகளில் கிரிமைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் சிரமம்.

ஷேவிங் ரேசர்
ஷேவிங் ரேசரில் இரண்டு வகையுண்டு. ஒன்று கூரான கத்தி போன்றது. மற்றொன்று பிளேடைப் பொருத்தி, இருபுறமும் திருப்பிப் பயன்படுத்துவது. இந்த முதல் வகை பழைய மரபான ஷேவிங் முறை. ஒரே முறையில் மிக அற்புதமாக ஷேவ் செய்துவிடலாம். ஆனால் கத்தி சில சமயம் முகத்தைப் பதம் பார்த்துவிடும். ஆனால் இரண்டாம் வகை ரேசர் மிகவும் பாதுகாப்பானது. நிதானமாக நமது வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும்.

லோஷன்
ஷேவிங் செய்து முடித்தவுடன் நம்மில் பல பேர் தண்ணீரில் முகத்தைக் கழுவிவிட்டு வேலை முடிந்தது என்று நினைத்துவிடுகிறார்கள். ஆனால் ஷேவ் செய்து முடித்தவுடன் கட்டாயம் லோஷனைப் பயன்படுத்த வேண்டும். அது சருமத்தை கடினத்தன்மையிலிருந்து காக்கும். சருமத்துக்கு நல்ல மாய்ச்சரைஸராகவும் பயன்படும்.

 

TAGS : men healthy shave beauty tips, men beauty tips in tamil, men tamil health tips, men health tips in tamil, men shaving tips in tamil

 

<<MORE POSTS>>

இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம்
புதிதாக தியானம் செய்ய ஆரம்பிப்பவர்கள் கவனிக்க வேண்டியவை
தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம்

 

<<VISIT OUR OTHER SITES>>

http:cinemaulagam.com
http:technotamil.com
http://tamilgossip.com/
http://tamilnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here