பிரசவ தழும்புகள் மறைய இதை செய்யுங்கள்

0
339
pregnancy strech mark heel tips

(pregnancy strech mark heel tips)

பிரசவத்துக்கு பின் மறையாமல் இருக்கும் தோல் சுருக்கங்களை போக்கமுடியாமல் தவிப்பவர்கள் இவற்றையெல்லாம் முயற்சி செய்து பார்க்கலாம்.

பிரசவம், ஹார்மோன் மாற்றம், உடலின் அதிகமான எடை ஆகியவற்றால் தோலில் அழுத்தம் உண்டாகிறது. இந்த அழுத்தத்தால் சுருக்கங்கள் விழுந்து தழும்பாக மாறும்.

இதை போக்க கடைகளில் பல க்ரீம்கள் வந்தாலும், பலர் இயற்கை முறைகளையே விரும்புகின்றனர். எனவே, வீட்டில் உள்ள சில பொருட்களைக்கொண்டு தோலில் விழும் சுருக்கங்களை நாம் எளிதில் போக்கலாம்.

உருளைக்கிழங்கு ஜூஸ்
தோலில் டேமேஜான செல்களை சரிசெய்யக்கூடிய சத்துக்கள் உருளை கிழங்கில் உள்ளது. துண்டாக வெட்டிய உருளை கிழங்கை தினமும் 10 நிமிடம் சுருக்கங்களில் தேய்த்துவர சுருக்கங்கள் மறையும். அல்லது, உருளை கிழங்கை வேக வைத்து அதையும் தேய்கலாம். பின்னர், வெந்நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு
துண்டுகளாக வெட்டப்பட்ட எலுமிச்சையை சுருக்கமுள்ள பகுதியில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்துவர சில நாட்களில் சுருக்கங்கள் மறைந்து தோல் பொலிவாக மாறும்.

கற்றாலை
கற்றாலை தோலுக்கு உகந்தது என்று அனைவரும் அறிந்ததே. கற்றாலையிலிருந்து வரும் ஜெல்லை 15 நிமிடங்கள் தேய்த்தால் தோல் புத்துணர்ச்சி பெரும். சுருக்கங்களும் மறையும்.

சர்க்கரை
சர்க்கரையை, பாதாம் எண்ணெயோடு கலந்து சுருக்கங்கள் உள்ள பகுதியில் மெதுவாக தேய்க்கவும். 10 நாட்களில் நல்ல பலன் தரும்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயை சூடேற்றி 20 நிமிடங்கள் தொடர்ந்து சுருக்கங்களில் மசாஜ் செய்யவும். இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமுள்ளதால், தோல் மினுமினுக்கும். சுருக்கங்கள் இருந்த இடமே தெரியாது.

 

TAGS : pregnancy strech mark heel tips, women pregnancy tips in tamil, strech heel tips in tamil, women health tips in tamil, health tips in tamil, tamilhealth tips, marks heel tips in tamil

 

<<MORE POSTS>>
குளிர்காலத்துக்கு ஏற்ற இஞ்சி குளியல்
டூவீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டலாமா? ஓட்டினால் என்ன ஆகும்?
தினமும் ஒரு கைப்பிடி திராட்சை சாப்பிடுங்கள்!

 

<<VISIT OUR OTHER SITES>>

www.tamilhealth.com
www.technotamil.com
www.cinemaulagam.com
www.tamilgossip.com
www.tamilsportsnews.com
www.sothidam.com

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here