ஸ்மார்ட் ஆன குழந்தை பிறக்க சில டிப்ஸ்!

0
367
Healthy smart baby birth pregnancy tips, smart baby birth pregnancy tips, smart baby birth tips, Healthy pregnancy tips, Healthy smart baby birth tips

(Healthy smart baby birth pregnancy tips)

கர்ப்பிணி பெண்கள் கடைப்பிடிக்கும் சில பழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் சிசுவின் வளர்ச்சி மட்டுமின்றி, புத்திக் கூர்மையும் அதிகரிக்க உதவுகிறது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அதனால் தான் கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் நல்லதையே நினைக்க வேண்டும், செய்ய வேண்டும், பேச வேண்டும் என முன்னோர்கள் கூறியிருந்தனர். கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் இருக்கும் சூழலும், செய்யும் செயல்களும் தான் சிசுவின் எதிர்கால செயல்பாடுகளில் மற்றும் குணாதிசயங்களில் எதிரொலிக்கும்.!

தீண்டுதல்!
நீங்கள் தனியாக இருக்கும் நேரத்தில் உங்கள் வயிறை கைகளால் மசாஜ் செய்துவிடுங்கள். வயிற்றில் வளரும் சிசுவிற்கும், வெளி உலகிற்கும் சிறிய கோடு அளவு தான் இடைப்பட்ட தூரம் இருக்கிறது. இந்த தீண்டுதல் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.!

இசை
கர்ப்பக்காலத்தில் உடல் அதிக சோர்வுடன் காணப்படும். அந்த நேரத்தில் மன அழுத்தம் குறைத்து ரிலாக்ஸாக இருக்க இசை உதவுகிறது. கர்ப்பக்காலத்தில் பெண்கள் எப்போதுமே அமைதியான சூழலில் இருக்க வேண்டியது அவசியம். சிசுவின் நல்ல வளர்ச்சிக்கு மெல்லிசை கேட்பது சிறந்தது.

நேர்மறை செயல்பாடுகள்!
செயல், பேச்சு, செய்கை என அனைத்திலும் நேர்மறை எண்ணங்கள் இருக்க வேண்டியது அவசியம். இது சிசுவுக்கும் நேர்மறை எண்ணங்கள் வளர செய்யும் என கூறப்படுகிறது.

சூரிய ஒளி!
உங்கள் மீது சூரிய ஒளிப்படுவது போல காலை இருபது நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். சிசுவின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி மிகவும் அவசியமானது. இது, நோய் எதிர்ப்பு மற்றும் எலும்பின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

புத்தகம்!
உறங்குவதற்கு முன்னர், நல்ல கருத்துள்ள புத்தகங்களை சில பக்கங்கள் வாசிக்க மறக்க வேண்டாம். இது குழந்தையின் மூளை சக்தியை அதிகரிக்கவல்லது.

ஆரோக்கியமான உணவுமுறை!
சமநிலையான டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அனைத்து சத்துக்களும் உங்களுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் தேவை.

உடற்பயிற்சி!
பெரும்பாலும் ஆறு, ஏழாவது மாதத்தை தாண்டும் போது பெண்கள் மிகவும் சோர்வாக உணர்வார்கள். ஆனால், இந்த காலக்கட்டத்தில் தான் அவர்கள் முடிந்த அளவிற்கு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். நடப்பது, உட்கார்ந்து எழுவது போன்றவை பிரசவத்தின் போது அதிக வலி ஏற்படாமல் இருக்க உதவும். மேலும், இது சிசுவின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்.

TAGS : Healthy smart baby birth pregnancy tips, pregnancy tips in tamil, healthy baby birth tips in tamil, women pregnancy tips in tamil
<<MORE POSTS>>
நினைவாற்றலைத் தரும் கை மருந்துகள்
தொப்பையை அதிரடியாகக் குறைக்கும் சாக்லெட் க்ரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்?
சர்க்கரை நோயாளிகள் பீன்ஸ் சாப்பிடலாமா?
<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here