இப்படி செஞ்சா ஈஸியா உடல் எடையைக் குறைக்கலாம்

0
620
Quick Healthy Slim Tips Tamil, Quick Healthy Slim Tips, Healthy Tips, Quick Slim Tips, Quick Slim Tips, Slim Tips Tamil

(Quick Healthy Slim Tips Tamil)

நம் பக்கத்து வீட்டுப் பெண் முதல் உலக அழகிவரை, திருமணத்துக்கு முன் கொடிபோல இருந்தவர்கள் பிரசவத்துக்குப் பின் இரண்டு, மூன்று சுற்று பருமனாகிவிடுகிறார்கள்.

‘‘கர்ப்பக்கால, பேறுகால உடல், மன, உணவு மாற்றங்களால் அது நிகழ்கிறது என்றாலும், பிரசவத்துக்குப் பிறகு உடல் எடையைக் குறைக்க பெண்கள் தேவையான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்’’

குழந்தைக்குப் பாலூட்டுவதே உங்கள் உடம்பைக் குறைப்பதற்கான முதல் மற்றும் சுலபமான தீர்வு.

உணவை மூன்று வேளைகள் என்பதற்குப் பதில் ஆறு வேளைகளாகப் பிரித்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம். குழந்தை பிறந்தவுடன், பெருத்துப்போன வயிற்றைக் குறைக்க துணி வைத்துக் கட்டுவது, பெல்ட் போடுவது, வயிற்றில் தண்ணீரை வேகமாக அடிப்பது இவையெல்லாம் பலன் தராத செயல்முறைகளே. மேலும் இவற்றைச் செய்வதால் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டால் எப்படி திசைக்கொன்றாகச் சிதறுமோ அப்படி வயிற்றுத் தசைகள் வழிந்து போகும். கவனம்.

அதிக கலோரிகளைத் தருகிற எண்ணெய், நெய் போன்றவற்றைத் தவிர்க்கவும். பழச்சாறு, சூப் போன்ற திரவ ஆகாரங்கள் நிறைய எடுத்துக்கொள்ளலாம். மேலும் ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி அதிகப்படியான எடையும் குறைய ஆரம்பிக்கும்.

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மட்டன் தவிர்த்து சிக்கன், முட்டை எனச் சாப்பிடலாம். குழந்தை பிறந்தவுடன் தாயின் உறக்க நேரம் குறையும் சூழல்கள் அதிகரிக்கும். அந்தத் தூக்கமின்மையும் உடல் எடை அதிகரிக்கக் காரணமாகும் என்பதால் குழந்தை உறங்கும் நேரத்தில் தாயும் உறங்கிப் போதுமான ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

எடை அதிகரிக்க வழிசெய்யும் நொறுக்குத் தீனிகள் வேண்டவே வேண்டாம். அவற்றுக்குப் பதிலாக பழங்கள், பயறு வகைகள் சாப்பிடும்போது தளர்ந்த உடல் இறுக்கமாகி பருமன் குறையும்.

மன அழுத்தம் தவிர்ப்பது மிக மிக முக்கியம். அது இல்லாமல் இருந்தாலே உடல் எடை கூடுவது முதல் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நடைப் பயிற்சியுடன் மருத்துவர் அல்லது பிஸியோதெரபிஸ்ட்டின் வழிகாட்டலோடு சில உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இவை நல்ல பலன் கொடுக்கும்.

 

TAGS : Quick Healthy Slim Tips Tamil, Slimming Tips in Tamil, Quick Fat Burn Tips in Tamil
<<MORE NEWS>>
யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது
வாயுத் தொல்லை தீர்க்கும் கை வைத்தியங்கள்
வாயுத் தொல்லை தீர்க்கும் கை வைத்தியங்கள்
<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here