உங்கள் சருமத்தை மென்மையாக்கும் முல்தானிமெட்டி

0
243
Soft Skin Care Mulathaanimetti Beauty Tips, Soft Skin Care Mulathaanimetti Beauty, Soft Skin Care Mulathaanimetti, Soft Skin Care, Soft Skin

(Soft Skin Care Mulathaanimetti Beauty Tips)

முல்தானிமட்டி என்பது சருமத்திற்கு அழகூட்டும் ஒரு ஒப்பனை பொருள். முல்தானிமெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. முல்தானிமெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும்.

இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது. முல்தானிமட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர்.

முல்தானிமெட்டியானது, மாவு போல பிசையப்பட்டு நேரடியாக முகத்தில் தடவலாம். இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இதனால் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படுவதில்லை.

முல்தானிமெட்டியுடன் தயிர், க்ரீம், பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகள் போல் தயாரித்து பயன்படுத்தலாம்.

இது தோலின் நிறத்தையும், அழகையும் கூட்டுகிறது. முல்தானிமெட்டி முகத்தில் தேய்த்து கழுவும் ஸ்கரப்பராகவும் பயன்படுகிறது. இதை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் வெண் புள்ளிகளையும் நீக்குகிறது.

சருமத்தின் தன்மையையும் பொலிவையும் மெருகூட்ட, முல்தானிமெட்டியை எப்போதும் பயன்படுத்தலாம்.

முல்தானிமெட்டி தோலில் உள்ள பழுப்பு நிறத்தை போக்கி, நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் முல்தானிமெட்டியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இது ஏற்படும். பழுப்பு நிறத்தை மாற்றும். சோப்புகள் மற்றும் முகம் கழுவ பயன்படும் க்ரீம்கள் கடைகளில் அதிக அளவில் கிடைக்கிறது. இவை அனைத்திலுமே முல்தானிமட்டியே முக்கிய உட்பொருளாக உள்ளது.

முல்தானிமெட்டி நிறமிகளை குறைத்து தோலை சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. அழற்சி மற்றும் சொறிகளால் ஏற்படக்கூடிய சிவப்பையும் குறைக்க உதவுகிறது முல்தானிமெட்டி.

 

TAGS : Soft Skin Care Mulathaanimetti Beauty Tips, Women Beauty Tips in Tamil, Multhaanimetti Benefits in Tamil

 

மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

<<MORE POSTS>>
 முதுகு வலி இருப்பவர்கள் இதை எல்லாம் செய்யாதீர்கள்

ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகம்

குழந்தைகள் அழுவதற்கு இதுதான் காரணமா?

 

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here