சோர்ந்த முகம் பொலிவாக மஞ்சள் பேஸ் மாஸ்கள்

0
249
Women Beauty Turmeric Face Mask Tips Tamil, Women Beauty Turmeric Face Mask Tips, Women Beauty Turmeric Face Mask, Beauty Turmeric Face Mask, Turmeric Face Mask

(Women Beauty Turmeric Face Mask Tips Tamil)

உங்கள் முகம் எப்போதும் சோர்ந்து காணப்படுகிறதா? கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் முகம் கருப்பாக காட்சியளிக்கிறதா? எவ்வளவு க்ரீம்களைக் கொண்டும் சருமத்தைப் பராமரித்தால் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லையா? இயற்கை வழியில் உங்கள் அழகை மேம்படுத்த நினைக்கிறீர்களா? இதற்கு வீட்டு சமையலறையில் உள்ள மஞ்சள் தூள் நல்ல நிவாரணம் அளிக்கும். (Women Beauty Turmeric Face Mask Tips Tamil)

முக்கியமாக மஞ்சள் தூள் முகப் பொலிவை அதிகரிப்பதோடு, பருக்கள், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற பல சரும பிரச்சனைகளையும் போக்கும். அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் மஞ்சளை அன்றாடம் பயன்படுத்தி வந்ததால் தான், அவர்கள் நீண்ட காலம் இளமையான தோற்றத்தில் காணப்பட்டார்கள்.

அத்தகைய மஞ்சளைக் கொண்டு ஒருவர் அடிக்கடி வீட்டிலேயே ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு போன்ற மருத்துவ பண்புகளால் சருமத்தின் அழகு மேம்படும். உங்களுக்கு முகத்தின் பொலிவை இயற்கை வழியில் அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மஞ்சள் ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்கள்.

மஞ்சள், கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர்
* ஒரு பௌலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் நேச்சுரல் ஸ்கின் டோனரான ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைத் துடையுங்கள்.

மஞ்சள் தூள், லாவெண்டர் ஆயில் மற்றும் தயிர்
* ஒரு சிறிய பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 2-3 துளிகள் லாவெண்டர் ஆயில் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த ஃபேஸ் பேக் கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். * இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

மஞ்சள் தூள் மற்றும் தேன்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

* பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் தூள், ஆலிவ் ஆயில் மற்றும் சந்தன பவுடர்
* ஒரு பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவுங்கள்.

* 15 நிமிடம் நன்கு காய வைத்து, இறுதியில் நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை போட நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மஞ்சள் தூள் மற்றும் பால்
* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் பால் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வையுங்கள்.

* இறுதியில் நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

மஞ்சள் தூள் மற்றும் பாதாம் ஆயில்
* 1 சிட்டிகை மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் நன்கு காய வையுங்கள்.

* இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இச்செயலை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் தூள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு
* ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு காய வையுங்கள்.

* இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை ஜெல்
* ஒரு சிறிய பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த முகம் பொலிவோடு இருக்கும்.

 

TAGS : Women Beauty Turmeric Face Mask Tips Tamil, Women Beauty Tips in Tamil, Herbal Face Mask Beauty Tips in Tamil

 

மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

 

<<MORE POSTS>>

அழகை கெடுக்கும் டென்ஷன்

உங்கள் சருமத்தை மென்மையாக்கும் முல்தானிமெட்டி

கோக்கா கோலா போன்ற மென்பானங்களை அதிகமாக அருந்துபவரா நீங்கள்? சற்று இதை வாசியுங்கள்

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here