சிசேரியன் பிரசவத்தில் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா?

0
264
Cesarean Birth Milk Feed Tips Tamil, Cesarean Birth Milk Feed Tips, Cesarean Birth Milk Feed, Cesarean Birth Milk, Cesarean Birth

(Cesarean Birth Milk Feed Tips Tamil)

கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய்ப்பால் கொடுப்பதற்காக பெண்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பிரசவம் பொதுவாக சுகப்பிரசவம் மற்றும் சிசேசரியன் மூலம் நடக்கிறது. சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.

இது முற்றிலும் தவறான கருத்து. இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் முடிந்ததும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். அப்படி மயக்கத்தில் இருப்பதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை. இதுதான் பால் பஞ்சத்தின் துவக்கம்.

சீம்பால் எனப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் கொடுக்கப்படும் முதல் பால் வாழ்நாள் முழுக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட எப்படியாவது குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டியது அவசியம். இதனால் பால் பற்றாக்குறை இல்லாமல் போகிறது.

தாய்ப்பால் கொடுக்க தெரியவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துப் பழக்க வேண்டியது அவசியம். பால் கொடுக்க கொடுக்கத்தான் தாய்ப்பால் பெருகும். அதை விடுத்து பாட்டிலில் பால் கொடுக்கக் கூடாது.

குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் தாய்ப்பாலிலேயே கிடைப்பதால், ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். ஏழாவது மாதத்தில் இருந்து எளிதில் செறிக்கக் கூடிய உணவுகளை கொடுக்கலாம்.

தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு பொதுவாக எடை அதிகரிக்கும் அல்லது கூடும். இவை தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியதும் சரியாகிவிடும்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் காக்கும். சிசேரியன் செய்வதால் பால் பற்றாக்குறை உண்டாவது இல்லை. அவ்வாறு உங்களுக்கு பால் பற்றாக்குறை உண்டானால் பால் சுரக்கக்கூடிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

 

TAGS : Cesarean Birth Milk Feed Tips Tamil, Women Pregnancy Tips in Tamil, Brest Feed Tips in Tamil
<<MORE POSTS>>

எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்

அரிசி சாதம் நீரிழிவுக்கு வழிவகுக்குமா?

நடிகை ஸ்ரீதேவியின் உயிரை காவு கொண்டதாக கூறப்படும் கார்டியாக் அரெஸ்ட்டுக்கும்… ஹார்ட் அட்டாக்கிற்கும் என்ன வித்தியாசம்?

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here