கோடை வெயிலில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

0
203
Summer Season Kids Protection Tips Tamil, Summer Season Kids Protection Tips, Summer Season Kids Protection, Summer Season Kids, Summer Season

(Summer Season Kids Protection Tips Tamil)

கோடை வெயில் தொடங்கிவிட்டது. குழந்தைகளுக்கு விடுமுறையும் ஆரம்பித்துவிடும். இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அவசியம்.

எனவே, குழந்தைகளை கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, பெற்றோர்களுக்கு மருத்துவர் கூறும் வழிமுறைகள்:

கோடையில் வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், வியர்க்குருவினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு, எண்ணெய் சுரப்பிகளும், வியர்வை சுரப்பிகளும் அடைத்துக் கொள்வதால், வியர்க்குரு உண்டாகிறது.

இது போன்ற நாட்களில், பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் சோப் மற்றும் பவுடரை உபயோகப்படுத்த வேண்டும்.

கோடை வெயிலில் அடுத்ததாக முகப்பருக்கள் உண்டாகும். அவை, முகம் மட்டுமல்லாமல், கழுத்து, நெஞ்சு,தோள்பட்டை ஆகிய இடங்களில் தோன்றும். அதுபோன்ற சமயங்களில், ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து முறைகள் முகத்தை கழுவ வேண்டும்.

மெல்லிய காட்டன் துணியால், அழுத்தித் தேய்க்காமல், ஒற்றியவாறு துடைக்க வேண்டும். உணவில், உப்பு, சர்க்கரை இவற்றின் அளவைக் குறைக்க வேண்டும்.

கோடை காலத்தில், குழந்தைகளுக்கு, அம்மை நோய் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உண்டு . வைரல் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். அவை வராமல் தடுக்க, நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஃபங்கல் இன்ஃபெக்ஷனால் வரும் தேமல் மற்றும் படர்தாமரை போன்றவைகள். இவைகள் வராமல் தடுக்க, குளித்தபின், ஈரத்தோடு துணியைப் போட்டுக்கொள்ளக் கூடாது. ஃபேன் காற்றில் நன்கு சருமத்தை உலர விட்டு பின்பு தான் அணிந்து கொள்ள வேண்டும்.

 

TAGS : Summer Season Kids Protection Tips Tamil, Kids Projection Tips in Tamil, Baby Skin Care Tips in Tamil

 

<<MORE POSTS>>
அதீத வியர்வை எனும் மிகப்பெரும் பிரச்சினை

குழந்தைகளுக்கு எவ்வாறான உடை அணிவிக்க வேண்டும்?

சிசேரியன் பிரசவத்தில் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா?

 

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here