உங்கள் எடையை குறைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

0
268
Weight Loss Dinner Tamil Health Tips, Weight Loss Dinner Tamil Health, Weight Loss Dinner Tami, Weight Loss Dinner, Weight Loss

(Weight Loss Dinner Tamil Health Tips)

இதுவரை உடல் எடையைக் குறைக்க உதவும் ஏராளமான டயட் திட்டங்களைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இருப்பினும், இரவு நேரத்தில் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது, எதை சாப்பிடலாம் என்பதில் சிறிது குழப்பம் இருக்கும். (Weight Loss Dinner Tamil Health Tips)

சிலர் எடையைக் குறைப்பதற்கு இரவு நேரத்தில் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். ஆனால் இப்படி பட்டினி கிடப்பதால் மட்டும் உடல் எடையைக் குறைத்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள்.

சொல்லப்போனால், இப்படி இரவில் சாப்பிடாமல் உறங்கினால், அதன் விளைவாக சரியான தூக்கத்தைப் பெற முடியாமல், அதனாலேயே உடல் பருமனடையக்கூடும். (Weight Loss Dinner Tamil Health Tips)

அதுவும் தூக்கமின்மையால், கலோரி அதிகம் நிறைந்த உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும. மேலும் சரியான தூக்கத்தை ஒருவர் மேற்கொள்ளாமல் இருக்கும் போது, மறுநாள் மிகுதியான களைப்பால் டயட்டை சரியாக பின்பற்ற முடியாமல் போய்விடும்.

ஆகவே எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர், இரவு நேரத்தில் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். ஏனெனில் இங்கு உடல் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

செர்ரிப் பழங்கள் (Weight Loss Dinner Food Tips Tamil)
செர்ரிப் பழங்களை இரவு உணவுக்கு பின் சாப்பிடுவதால், வயிறு நிறைவதோடு, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். ஏனெனில் செர்ரிப் பழத்தில் மெலடோனின் உள்ளது. இது தூக்கத்தை சீராக்க உதவும். மேலும் இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலினுள் உள்ள அழற்சி மற்றும் உப்புசத்தை எதிர்த்துப் போராட உதவும்.

தயிர்
கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த தயிருக்கு பதிலாக, வீட்டிலேயே தயாரித்த தயிரை உட்கொள்ளுங்கள். இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதோடு, சர்க்கரையும் இருக்காது. இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் வயிற்றை நிரப்புவதோடு, தூங்கும் போது கொழுப்புக்களைக் கரைக்க உதவி, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.

வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட்
வேர்க்கடலை வெண்ணெயை முழு தானிய பிரட்டில் தடவி சாப்பிட்டால், அது சுவையாக இருப்பதோடு, வயிற்றையும் நிரப்பும். ஏனெனில் வேர்க்கடலை வெண்ணெயில் தாவர வகை புரோட்டீன் உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, இதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்து, எடையைக் குறைக்க உதவும்.

காட்டேஜ் சீஸ்
எடையைக் குறைக்க நினைப்போர் இரவு நேரத்தில் காட்டேஜ் சீஸ் சாப்பிடுவது நல்லது. காட்டேஸ் சீஸில் கேஸின் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. இது இரவு முழுவதும் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருப்பதோடு, பாதிக்கப்பட்ட தசைகளை சரிசெய்யவும் உதவும். மேலும் இதில் கலோரிகள் குறைவு என்பதால், எடையைக் குறைக்க உதவி புரியும்.

வான்கோழி
வான்கோழியில் ட்ரிப்டோபேன் என்னும் நல்ல தூக்கத்தைப் பெற உதவும் பொருள் உள்ளது. மேலும் இதில் கொழுப்பில்லாத புரோட்டீன் உள்ளதால், தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே அச்சம் கொள்ளாமல் இரவு நேரத்தில் வான்கோழியை சுவைத்து மகிழுங்கள்.

சாக்லேட் மில்க்
சாக்லேட் மில்க் எடையைக் குறைக்க நினைப்போருக்கான மிகச்சிறந்த பானம். ஏனெனில் இதில் கால்சியம் அதிகம் உள்ளது. 1000 மிகி-க்கும் அதிகமான கால்சியம் 18 பவுண்ட் எடையைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கால்சியம் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி அவசியம். இந்த இரண்டுமே சாக்லேட் மில்க்கில் உள்ளது. எனவே இதை இரவில் குடியுங்கள்.

பாதாம்
பாதாமில் 5 கிராம் புரோட்டீன் உள்ளது. இது இரவு நேரத்தில் பாதிக்கப்பட்ட தசைகளை சரிசெய்ய உதவி புரியும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்தும். அதோடு பாதாம் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கான மிகச்சிறந்த உணவுப் பொருள் என்பதால், இரவில் இதை உட்கொள்ளலாம்.

நார்ச்சத்துள்ள செரில்
இரவு நேரத்தில் ஒரு பௌல் நார்ச்சத்துள்ள செரில்கள் உண்பது நல்லது. இதனால் அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, கொழுப்புக்களைக் கரைக்கவும் செய்யும். ஆய்வுகளிலும் நார்ச்சத்துள்ள உணவுகள் உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இத்தகைய க்ரீன் டீயை இரவில் தூங்கும் முன் ஒரு கப் குடிப்பதன் மூலம், உடல் எடையை சீக்கிரம் குறைக்கலாம். க்ரீன் டீயில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், இரவு நேரத்தில் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும்.

வேக வைத்த முட்டை
முட்டையில் புரோட்டீன்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கான சிறப்பான உணவுப் பொருட்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஒரு பெரிய முட்டையில் 78 கலோரிகள் மற்றும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே எளிதில் எடையைக் குறைக்க நினைத்தால், முட்டையை தினமும் சாப்பிடுங்கள்.

வாழைப்பழம்
எடையைக் குறைப்போர் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். ஆனால் ஒருவர் இரவில் படுக்கும் முன் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுவதோடு, எடை குறையவும் உதவி புரியும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
எடையைக் குறைப்போருக்கான மற்றொரு சிறப்பான இரவு உணவு சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இந்த கிழங்கை இரவு நேரத்தில் டயட்டில் இருப்போர் உட்கொண்டால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, உடல் எடையை ஆரோக்கியமாகவும் குறைக்க உதவும். எனவே இந்த கிழங்கை இரவு நேரத்தில் சாப்பிட்டு மகிழுங்கள்.

பச்சை வெங்காயம்
வெங்காயத்தை இரவு நேரத்தில் பச்சையாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் பச்சையாக சாப்பிடும் எந்த ஒரு உணவுப் பொருளும் செரிமானமாவதற்கு தாமதமாவதால், அது வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லையை சந்திக்க வைத்து, இரவு நேரத்தை மோசமாக்கிவிடும். அதிலும் நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் வெங்காயத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது அமில சுரப்பை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே இரவு நேரத்தில் வெங்காய பச்சடி அல்லது சாலட்டில் வெங்காயத்தை சேர்க்காதீர்கள்.

 

மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

 

TAGS : Weight Loss Dinner Tamil Health Tips, Weight Loss Dinner Food Tips Tamil, Diet Food Tips in Tamil, Weight Loss Tips in Tamil

 

<<MORE POSTS>>
கோடை வெயிலில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

அளவுக்கு அதிகமாக பசிக்கிறதா?

பெர்ஃபியூம் வாங்க முதல் இதை தெரிந்து கொள்ளுங்கள்

 

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here