தோல் நீக்கிய சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்?

0
139
Skinless Chicken Food Habit Tips Tamil, Skinless Chicken Food Habit Tips, Skinless Chicken Food Habit, Skinless Chicken Food, Skinless Chicken

(Skinless Chicken Food Habit Tips Tamil)

உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? சிக்கனில் கொழுப்பு இருப்பதால், எங்கு அது உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்று அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் கவலையை விடுங்கள். சிக்கனை சாப்பிட வேண்டுமானால் லீன் சிக்கனை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். அது என்ன லீன் சிக்கன் என்று தானே கேட்கிறீர்கள். (Skinless Chicken Food Habit Tips Tamil)

லீன் சிக்கன் என்பது தோல் நீக்கப்பட்ட சிக்கன் அல்லது சிக்கன் நெஞ்சுக்கறி ஆகும். இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. ஆனால் சத்துக்களோ ஏராளம். ஆகவே இது அனைவருவம் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான ஓர் அசைவ உணவுப் பொருளாகும். முக்கியமாக சிக்கனின் நெஞ்சுக்கறியில் புரோட்டீன், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

Related image

மன இறுக்கத்தைப் போக்கும்
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் அமினோ அமிலமான ட்ரிப்டோஃபேன் அதிகளவில் உள்ளது. இது உடலுக்கு உடனடியாக ரிலாக்ஸ் அளிக்கும். நீங்கள் ஒருவேளை மன இறுக்கத்தில் இருந்தாலோ அல்லது மனக்கவலையுடன் இருந்தாலோ, தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுங்கள். இதனால் மூளையில் செரடோனின் அளவு அதிகரித்து, மன இறுக்கத்தில் இருந்து நிவாரணம் அளித்து, மனநிலையை மேம்படுத்த உதவும்.

அதிக புரோட்டீன் நிறைந்தது
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது. புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் அவசியமானது. ஆகவே நீங்கள் கட்டுமஸ்தான உடலைப் பெற நினைத்தால், தோல் நீக்கப்பட்ட சிக்கனைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும்
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களுடன், பி வைட்டமின்களும் அதிகம் உள்ளது. இது கண் புரை, பல்வேறு சரும பிரச்சனைகள், உடல் பலவீனம் போன்றவற்றை தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி, இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கும். ஆகவே தினமும் சிறிது தோல் நீக்கப்பட்ட சிக்கனை சிறிது சாப்பிட மறக்காதீர்கள்.

எடை குறைய உதவும்
டயட்டில் இருப்போர் தோல் நீக்கப்பட்ட சிக்கனை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தோல் நீக்கப்பட்ட சிக்கனில் புரோட்டீன் அதிகமாகவும், கொழுப்புக்கள் குறைவாகவும் உள்ளது. எனவே எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்போர், அசைவ உணவை சாப்பிட நினைத்தால் தோல் நீக்கப்பட்ட சிக்கனை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

இரத்த அழுத்தம் குறையும்
தோல் நீக்கப்பட்ட சிக்கன், இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுவதாக ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுங்கள். ஏனெனில் இது இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கும். அதிலும் தோல் நீக்கப்பட்ட சிக்கனை தீயில் வாட்டியோ அல்லது வேக வைத்தோ தான் சாப்பிட வேண்டும்.

மெட்டபாலிசம் அதிகரிக்கும்
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் வைட்டமின் பி6 உள்ளது. ஒருவர் இச்சத்து நிறைந்த தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடும் போது, இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கப்படும். மேலும் இது உடலின் ஆற்றலை அதிகரித்து, மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, அதிக கலோரிகளை எரிக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்
ஆய்வு ஒன்றில் தோல் நீக்கப்பட்ட சிக்கன், இயற்கையாகவே புற்றுநோயான குடல் புற்றுநோயைத் தடுக்கும் என தெரிய வந்துள்ளது. எனவே ஒருவர் அடிக்கடி தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிட்டால், அது புற்றுநோயின் அபாயத்தைக் குறிப்பிட்ட அளவு குறைக்கும்.

கொலஸ்ட்ரால் குறைவு
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் மற்ற இறைச்சிகளை விட சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவு. இதனை ஒருவர் உட்கொண்டு வந்தால், சாச்சுரேட்டட் கொழுப்புக்களால் ஏற்படும் அபாயம் குறையும் மற்றும் பல்வேறு வகையான இதய நோயின் அபாயமும் குறையும். முக்கியமாக தோல் நீக்கப்பட்ட சிக்கன், பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

வலிமையான எலும்புகள்
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் பயனுள்ள புரோட்டீன் உள்ளது. இது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குறைக்கும். மேலும் தோல் நீக்கப்பட் சிக்கனில் உள்ள பாஸ்பரஸ், எலும்புகள், பற்கள் மற்றும் மைய நரம்பு மண்டலத்தின் வலிமைக்கு உதவியாக இருக்கும்.

உடல் வடிவமைப்பு
தோல் நீக்கப்பட்ட சிக்கன் விரும்பும் உடலமைப்பைப் பெற உதவியாக இருக்கும். லீன் சிக்கனில் உள்ள புரோட்டீன், உடலில் உள்ள தசைகளை இறுக்கமடைய உதவுவதோடு, விரும்பும் வகையிலான உடலமைப்பைப் பெற உதவும். ஆகவே அழகான கட்டுடலைப் பெற ஜிம் சென்று உடற்பயிற்சியை செய்து வருவோர், அன்றாடம் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஆரோக்கியமான தலைமுடி மற்றும் நகங்கள்
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் இருக்கும் அதிகளவிலான புரோட்டீன் தலைமுடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். உடலில் புரோட்டீன் அளவு குறைவாக இருந்தால், தலைமுடி வறண்டு, எளிதில் உடையும் வண்ணம் இருக்கும். தலைமுடி மட்டுமின்றி, நகங்களும் வலுவிழந்து உடையும். ஆகவே இதைத் தவிர்க்க லீன் சிக்கனை உங்கள் டயட்டில் தவறாமல் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரும்புச்சத்து நிறைந்தது
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் உள்ள இரும்புச்சத்து, உடலினுள் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் மற்றும் உள்ளுறுப்புக்களுக்கு இரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜனை அனுப்பும் செயல்முறையை மேம்படுத்தும். இரும்புச்சத்து குறைபாடு உடலினுள் ஏற்படும் போது, உடலியக்கத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல், விரைவில் சோர்வை உணரக்கூடும். தோல் நீக்கப்பட்ட சிக்கனில் ஒரு நாளைக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

குறைவான சாச்சுரேட்டட் கொழுப்புக்கள்
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புக்களான சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இருப்பினும் இந்த வகை சிக்கனில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மற்ற இறைச்சிகளை விட குறைவான அளவிலேயே உள்ளது. ஆகவே தோல் நீக்கப்பட்ட சிக்கனை அதிகம் சாப்பிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

செலினியம் நிறைந்தது
லீன் சிக்கனில் கலோரி குறைவு மற்றும் கொழுப்பு குறைவு. அதே சமயம் இந்த சிக்கனில் செலினியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6 மற்றும் கோலைன் உள்ளது. செலினியம் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டது. இது உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பை வழங்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின்களான பி3 மற்றும் பி6 கார்போஹைட்ரேட்டுக்களை க்ளுக்கோஸாக மாற்றி, பின் ஆற்றலாக மாற்றும். அதோடு இதில் இருக்கும் நியாசின் என்று அழைக்கப்படும் வைட்டமின் பி3, செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவும், நரம்புகளின் செயல்பாட்டைப் பராமரிக்கும் மற்றும் அழற்சியைக் குறைக்கும்.

 

TAGS : Skinless Chicken Food Habit Tips Tamil, Healthy Food Tips in Tamil, Health Tips in Tamil

 

<<MORE POSTS>>

ஏழாவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் தெரியுமா?

கருப்பட்டியை வெறுப்பவரா நீங்கள்? இதை கொஞ்சம் படிங்க

உங்கள் கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா?

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here